Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Sep 4, 2014

தமிழகத்தை இலங்கையுடன் இணைத்து விடலாம்

தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. 

  தனிஈழம், கச்சத்தீவு குறித்து வீட்டில் குடும்பமாக விவாதித்துக் கொண்டிருந்தோம்.  இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் ஒன்பது வயது மகன் அறிவு பட்டென ஒரு யோசனையை சொன்னான். 
  கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதை விட, தமிழகத்தை இலங்கையுடன் இணைத்துவிடலாமே!. குழந்தையின் இந்த எதார்த்த பேச்சு எங்களை வேடிக்கையாக யோசிக்க வைத்தது.  

  தமிழகத்தை இலங்கையுடன் இணைத்தால் தமிழர்களின் அத்தனை பிரச்சனைகளும் தீரும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் சிங்களவர்களோ 2 கோடி பேர் மட்டுமே. தமிழகத்தை இலங்கையுடன் இணைப்பதால் தமிழர்கள் பெரும்பான்மையினராகி விடுவோம். சிங்களவர்கள் சிறுபாண்மையினராகி விடுவார்கள். அப்புறம் இலங்கையில் தனிநாடு கேட்டு சிங்களர்கள் தான் போராட வேண்டும். அதை இனத் தீவிரவாதம் என்று ஒடுக்க பெரும்பான்மையினராக இருக்கும் தமிழகர்களுக்கு மிக எளிதானது. 

 தமிழர்கள் தான் இலங்கையின் அத்தனை அதிகாரங்களிலும் இருப்பார்கள். சிங்களவர் எந்த காலத்திலும் இலங்கையின் சனாதிபதியாக முடியாது. தமிழக முதல்வர் சனாதிபதியாகவிடுவார். இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதை விட இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாமே. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும்பாண்மையினர் கருத்து தானே எடுபடுகிறது. தமிழர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்.

 இந்த கருத்துக்காக தடா, பொடா, குண்டர், தேசதுரோகம் எதுவரும் என்று தெரியவில்லை. பயம் இருக்கிறது. ஆனாலும் பயத்தை தான்டி மன உணர்வுகள் வெளிப்பட்டு விடுகிறது. 

 இந்த கருத்துக்கள் யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் மன்னித்துக்கொள்ளுங்கோள். இப்படி யோசிப்பது தேச துரோகம் என்றால் அதற்கும் சேர்த்து ஒரு மன்னிப்பு. 

‘‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகமிக திறமைசாலிகள், ஆனால் வாய் தான் கொஞ்சம் நீளம்!’’ தமிழர்களைப் பார்த்து சும்மாவா சொல்லி வைத்தார்கள்?  இந்தியா வாழ்க. இலங்கை வாழ்க!, இன்னும் ஒரு படி மேலேபோய் இலங்கையின் இறையாண்மையும் வாழ்க!! அப்புறம் என்ன? விடுங்க சாமி என்னை! எதோ கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன். 

பின் குறிப்பு : பெரும்பாண்மையினர் சிறுபாண்மையினரை அடக்கும் ஆட்சி முறைக்கு எதிரான உதாரண கட்டுரை மட்டுமே இது. மாறாக வேறு அர்த்தம் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.

Mar 26, 2013

அம்மா அடித்த சிக்சர்

ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற்றால் சென்னையில் போட்டிகள் நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தமிழீழம் வரலாற்றில் மிகமுக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் ஈழப்பேராட்டத்தில் தமிழர்கள் வைக்கும் முதல் பிரமாண்ட செக் என இதை சொல்லலாம். 


த்பூ... கேவலம் ஒரு விளையாட்டுக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? இதை ஈழத்தமிழர் போராட்டத்தோடு ஒப்பிடலாமா? என கருணாநிதி பாணியில் சிலருக்கு சந்தேகம் வரலாம்.

இது ஒரு சிறுபிள்ளைத்தனம் என சர்வதேச சமூகம் சிரிக்கலாம். ஆனால் அழிக்கமுடியாத ஈழப்போராட்டத்தை ஒடுக்கிய முக்கிய காரணிகளில் இந்த வியாபார விளையாட்டு அடங்கிக் கிடக்கிறது.

அவ்வளவு சீக்கிரம் விடுதலைப்புலிகளை அழித்துவிட முடியாது என்பது ராசபட்சே கும்பலுக்கு தெரியாமல் இல்லை. 

இந்த நிலையில் தான் சோனியா, ராகுல் என்ற தனிப்பட்ட மனிதர்களின் மனக்காயங்களை ராசபட்சே முதல் ஆயுதமாக எடுத்தான். அடுத்து சர்வதேச வியாபார நிறுவனங்களுக்கு வலை விரித்தான். ஆயுத வியாபாரம் செய்ய அத்தனை நாடுகளும் முன்வந்தன. ஆயுத வியாபாரம் தீர்ந்ததும், பொருளாதார வியாபார சந்தைகளை இலங்கையில் ஏற்படுத்தலாம் என கணித்தன.

ஈழம் ஒடுக்கப்பட்டது. சோனியா ராகுல் மனக்காயங்கள் ஆறியது. ஆனாலும் ராசபட்சேவுக்கு பயம் மட்டும் இன்னும் போகவில்லை. மேதகு பிரபாகரன் மீண்டும் உயிர்த்தால்? ஓராயிரம் பிரபாகரன்கள் வளர்ந்தால்?

பாகிசுதானில் கொடிகட்டிப்பறந்த முசரப் பின்னர் பல நாடுகளில் ஓடி ஒழிந்த வரலாறு ராசபட்சேவுக்கு தெரியாமல் இல்லை. இந்த நிலை தனக்கு வராமல் இருக்க ராசபட்சே இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை.

தன்னை எக்காலங்களிலும் காப்பாற்றும் சக்தி இலங்கை இனவெறி சிங்களர்களிடமோ, இந்தியா சீனா பாகிசுதான் போன்ற அரசாங்கங்களிடமோ இல்லை என்பது ராசபட்சேவுக்கு தெரியும். அதனால் தான் சர்வதேச நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டார்.

இன்று இந்தியா சீனா உட்பட நாடுகள் இலங்கையை நட்பு பாராட்டுவதன் பின்னனியில் இலங்கை என்ற வியாபார சந்தை தான் உள்ளது.

நாடு இறையாண்மை, மனிதநேயம் இவைகளை கடந்து வியாபார சந்தை என்ற ஒற்றை ராசதந்திரத்தை மேதகு பிரபாகரன் அவர்கள் கவனிக்கவில்லை. இதை கவனத்தில் கொண்டிருந்தால் ராசபட்சே என்ற பெயரே வரலாற்றில் எங்கும் எழுதப்பட்டிருக்காது.

சரி இனி இன்றைய விடயத்துக்கு வருவோம். 

2 கோடி மக்கள் உள்ள சந்தை பெரிதா? 7 கோடி மக்கள் உள்ள சந்தை பெரிதா? என்ற கேள்விக்கு பதில்தேடவேண்டிய முதல்கட்ட நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை என்பது புதிய சந்தை. எனவே வியாபாரம் சூடுபறக்கிறது. ஆனால் இந்த புதிய சந்தைக்காக தமிழ்நாடு என்ற மிகப்பெரிய நிரந்தர சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்கள் இழக்க தயாராகுமா? இங்கே தான் தமிழக முதல்வர் மிக சரியாக செயல்பட்டுள்ளார். இலங்கை போரை நடத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முதல்கட்ட செக்கை வைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் தடை விதித்ததும். தமிழகத்தின் மீது ஒரு ஏளன சிரிப்போடு உடனடியாக இலங்கைக்கு மாற்றிக்கொண்டார்கள். 

இதை ஒரு தோழ்வியாக கருத தேவையில்லை. காரணம் அது பணம்கொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபாரம் அல்ல. ஆனால் ஐ.பி.எல் கிரிக்கெட் என்பது பணம்கொழிக்கும் ஆட்டம். இதில் இலங்கை முக்கியமா? சென்னை முக்கியமா? என்ற கேள்விக்கு விடைதேடியே ஆக வேண்டும். அதுவும் குறுகிய நாட்களில்.

என்னுடைய கணிப்பு படி இதில் தமிழ்நாட்டு சந்தை தான் வெல்லும் என்று நினைக்கிறேன்.

அப்படி நடந்தால் தனிஈழம் அமைய இன்னும் நாம் வெகுதுரம் செல்லவேண்டியதில்லை...

Feb 24, 2012

என்கவுண்டரும் ஈழப்போரும் என்ன வேறுபாடு


உலகிலேயே மிகவும் கோழைத்தனமான காவல்துறை என்ற பெயரை எடுத்துள்ளது தமிழக காவல்துறை. சாதாரண வங்கிக்கொள்ளையர்களை சுட்டு தான் பிடிக்கவேண்டும் என்ற பயந்தாங்கோலிகளா தமிழர்கள். தமிழ்நாடு என்பது மனிதநேயம் உள்ள மக்கள் வாழும் நாடா இல்லை காட்டுமிராண்டிகள் வாழும் நாடா? 

என்கவுண்டர் செய்தால் தமிழக மக்கள் ஆகா ஓகோ என்பார்கள் என்ற தைரியத்தில் தானே இத்தனை அக்கிரமத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஒருவனை கூட விட்டுவைக்ககூடாது என்ற கொலைவெறி தமிழக போலீசாருக்கு எங்கிருந்து வந்தது? கொலைவெறி பாடலை தமிழர்கள் உள்ளூர ரசித்திருக்கிறார்கள் என்பதை இப்படி தான் வெளிக்காட்ட வேண்டுமா? 

தமிழக போலீசார் யார்? சைகோவா?, கொலைகார எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்தவர்களா? கொடூர கொலைகாரர்களுக்கும் தமிழக போலீசாருக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. அதிகாரம், ஆயுதம், தொழில்நுட்பம் இத்தனையும் கொடுத்தும், கொன்று தான் பிடிக்க வேண்டும் என்றால் இந்த கொலைகார காவல்துறை தமிழர்களுக்கு தேவையா? 
இங்கு என்கவுண்டரை ஆதரித்து பேச சிலர் முன்வரலாம். ஒரு வருடத்திற்கு முன்னர் கோவையில் நடந்த என்கவுண்டரை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட மோகன்ராசு தான் குற்றவாளி என போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. 

என்கவுண்டரை ஆதரித்து பேசும் தமிழர்களே உலக அரங்கில் இரக்க குணம் அற்ற மிருகங்கள் தான் தமிழர்கள் என்ற பெயரை எடுத்து விடாதீர்கள். மனித உரிமைகள் பற்றி பேச உங்களுக்கு துளியும் யோக்கியதை இல்லை. உங்கள் தலைசிறந்த காவல்துறையால் இன்று நீங்கள் தலைகுனித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்கவுண்டர் என்பது வீரம் என்று யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. கோழைகளே இனியாவது திருந்துங்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?

இலங்கையின் மனித உரிமை பற்றி பேச உங்களுக்கு என்னடா யோக்கியதை இருக்கிறது? 

என்கவுண்டர் நடந்த இடத்துக்கு 10 மணி நேரம் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. எதற்காக? எதை மூடி மறைக்க? உங்கள் துக்கடா போலீசுக்கே இந்த புத்தி இருக்கும்போது இலங்கை ராணுவத்துக்கு எவ்வளவு புத்தி இருக்கும். நீங்கள் பேசுகிறீர்கள் இலங்கை ராணுவம் மனிதஉரிமைகளை மீறியது என்று. 

தமிழ் நாட்டினரே இனியும் என்கவுண்டரை ஆதரித்து தமிழரின் பாரம்பரிய நற்குணத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

Jan 23, 2012

சி.சி.எல் கேரளா கலாதிமாறன் ரகசிய உத்தரவு

சி.சி.எல் கிரிக்கெட் முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என கலாதிமாறன் செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சி.சி.எல் எனப்படும் சினிமா நடிகர்கள் பங்குபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதன் முக்கிய பங்குதாரராக சன்டிவி நெட்வொர்க் தலைவர் கலாதிமாறன் உள்ளார். போட்டிகள் அனைத்தும் சன், சூரியா, உதயா, போன்ற இவரது சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு பிரச்சனை வெடித்தவுடன் என்ன ªச்ய்வது என்று தெரியவில்லை. சென்னை, கேரளா அணிகள் மோதும் போட்டியை சென்னை அல்லது கொச்சியில் நடத்தினால் மட்டுமே பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை வேறு வழியில்லாமல் ஆந்திராவில் நடத்தினார்கள். 100 பார்வையாளர்கள் கூட இல்லாததால் ஆட்டம் ஆடும் பெண்கள் கூட சோர்ந்து போனார்கள். 

இந்நிலையில் வரும் 28ம் தேதி கேரள&பெங்கால் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக கேரள நடிகர்கள் அணி சென்னை வர உள்ளது. இந்த நேரத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சனை பூதகரமாக்கப் பட்டுவிடக்கூடாது என்பதில் சன் குழுமம் முனைப்புடன் செயல்படுகிறது. இதற்காக தினகரன், சூரியன் எஃப் எம், சன் டிவி உட்பட செய்தியாளர்களுக்கு புது உத்தரவு வந்துள்ளது. சி.சி.எல் போட்டி முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

அதே போல பாசமலர் நக்கீரனுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை கொதிக்கும் தண்ணீரில் கொல்லப்பட்ட தமிழன் என்று செய்தி வெளியிட்ட நக்கீரன், இப்போது கேரள சென்னை அணிகள் மோதிய படங்களை எக்சுகுளூசீவ் படங்களாக வெளியிட்டுள்ளது.

கேரள நடிகைகள் நடிக்ககூடாது என விரட்டியடித்தனர். மலையாள விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகளின் படங்களை போட்டு எச்சரித்தனர். இப்போது அணி அணியாய் நடிகர்கள் கேரள செல்கிறார்கள். இதில் எல்லாம் உங்கள் தமிழ் உணர்வு விதிவிலக்கா? அல்லது தமிழ்பற்று நடிகைகளுக்கு மாட்டும் தானா? நடிகர்களுக்கு இல்லையா? இதில் கூட உங்கள் ஆணாதிக்கம் தானே தெரிகிறது.

கலாநிதிமாறனுக்கும், நக்கீரன் கோபாலுக்கும், தினமலர் மகேசுக்கும் வியாபாரத்துக்காக முல்லைப்பெரியாறு, தமிழ்பற்று இவைகளை ஓதுகிறார்கள். இதை புறிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.

ஈழப்போர் உச்சகட்டத்தின் போது குழந்தைகளையாவது மீட்க குரல்கொடுங்கள் என்று கெஞ்சியபோது மவுனம் சாதித்த அப்துல்கலாம் இப்போது சாமாதனாம் நிலைநாட்ட இலங்கை சென்றுள்ளார். சத்தியமா சொல்ரேங்க அப்துல்கலாம் இப்ப பணத்துக்காக மட்டும் இலங்கை போகலை தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட சென்றுள்ளார்.

என் பாட்டி பாணியில் வயிர்எரிந்து சொல்கிறேன் ஈழக்குழந்தைகளின் ஆன்மா அப்துல்கலாமை சும்மா விடாது. போலிகளின் முகத்திரை நிச்சயம் ஒருநாள் கிழியும். அன்றாவது அவன் அயோக்கியன் என்பதை இந்த உலகம் நம்பட்டும்.

Aug 18, 2011

வைகோ, அப்துல்கலாம் தமிழரின் தலைஎழுத்து

ஒரு புதிய பத்திரிக்கையின் துவக்க விழாவில் பேச அழைத்திருந்தார்கள். கல்லூரி மாணவ&மாணவிகளுடனான கலந்துரையாடல் நடந்தது. பல விசயங்களை சுவாரசியமாக அலசினார்கள். அரசியல் குறித்து தெளிவான கருத்துக்களை பேசினார்கள். விவதத்தின் இடையே வைகோ பற்றிய பேச்சு வந்தது. 

வைகோ ஒரு துரோகி, ஈழத்தை எதிர்த்த, போடா சட்டத்தில் சிறையில் அடைத்த செயலலிதாவுடன் கூட்டனி வைத்துக்கொண்டதுடன் வைகோ மீதிருந்த மதிப்பே போய்விட்டது எனறார் அந்த பத்திரிக்கை ஆசிரியர். அதை அனைவரும் அமோதித்தார்கள்.

நான் குறுக்கிட்டேன். வைகோ செயலிதாவுடன் கூட்டணி வைத்தது காலத்தின் கட்டாயம். கருணாநிதி என்ற நயவஞ்சக நண்பனுடன் இருப்பதை விட எதிரி செயலலிதாவே மேல் என்பது தான் வைகோவின் முடிவு. மேலும் செயலலிதாவுடனான 5 ஆண்டு கூட்டணியில் ஈழம் குறித்த கொள்கையை செயலலிதா தான் மாற்றிக் கொண்டாரே தவிர வைகோ மாறவில்லை. ஈழத்தை எதிர்த்த செயலலிதா வாயில் இருந்தே தனி ஈழம் அமைத்தே தீருவோம் என்ற தீர்க்கமான சொல்லை வரவைத்தவர் வைகோ. இது மிகப்பெரிய சாதனை. 

செயலலிதா & வைகோ கூட்டணியில் செயலலிதாவுக்காக இம்மி அளவும் வைகோ ஈழம் உட்பட கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக செயலலிதாவை திருத்தியிருக்கிறார். கருணாநிதியால் முடியாததை வைகோ சாதித்திருக்கிறார் என்றேன். ஒரு கனம் சித்தித்த அனைவரும் ஆமாம் நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு சரிதான் என்றார்கள்.

அடுத்து அப்துல்கலாம் பற்றிய விவாதம் வந்தது. இப்போதைய தலைவர்களில் தமிழர்களுக்காக சுயநலம் இன்றி உழைக்கும் ஒரே தலைவர் அப்துல்கலாம் தான் என்றனர் மாணவியர். அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

அப்துல்கலாம் எதனால் பிரபலமானார் ?

கனவுகாணுங்கள் கனவு காணுங்கள் என்று பள்ளிகளில் சென்று குழந்தைகளுக்கு உத்வேகம் கொடுத்தார். இளைஞர்களை சாதிக்க தன்னப்பிக்கை ஊட்டினார் என்றார்கள்.

குழந்தைகளுக்காக அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட அப்துல்கலாம். தன் வீட்டில் இருந்து 7 மைல் தொலைவில் 30 ஆயிரம் குழந்தைகள் இறந்ததை பார்த்து கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன் என்றேன். புறியாமல் விழித்தார்கள்.

ஈழம் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருக்கும் போது, அங்குள்ள குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும். அதற்காக குரல் கொடுங்ங்கள். உங்கள் தலைமையில் பல இளைஞர்கள் அணிவகுக்க தாயராக உள்ளனர். நீங்கள் ஒரு நாட்டின் குடியரசு தலைவராக இருந்துள்ளீர்கள், சர்வதேச தலைவர்களை தெரியும். இந்தியா முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல், ஏக்களை தெரியும், கட்சி தலைவர்களை தெரியும், அவர்களை அழைத்து பேசுங்கள். குழந்தைகளை, பெண்களை மீட்கும் வரையாவது போரை நிருத்த நிர்பந்தியுங்கள். நீங்கள் குரல்கொடுத்தால் நிச்சயம் இந்தியா முழுவதும் எழுர்ச்சி வரும் என்று பல அமைப்புகள் அப்துல்கலாமை நாடின. ஆனால் இன்று வரை ஈழக்குழந்தைகளுக்காக வாய் திறக்கவில்லை அப்துல்கலாம். அவரா குழந்தைகளை சுயநலமின்றி நேசிக்கிறார்.




இந்திய குழந்தைகள் தான் குழந்தைகளா? 5 மைலுக்கு அப்பால் ஈழத்தில் இருப்பது குழந்தைகள் இல்லை¬யா? அவர்கள் தீவிரவாத குழந்தைகளா? எதற்காக அப்துல்கலாம் ஓடி ஒளிந்தார்? 

ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கே ஈழக்குழந்தைகளின் வேதனை தெரியாவில்லை என்றால் வடஇந்தியாவில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்?   

எல்லோரும் தங்களுக்கு என ஒரு சுயநல வட்டத்தை போட்டுக்கொண்டு பிரபலத்துக்காக அடும் சுயநலவாதிகள் தானே தவிர யாரும் அப்பழுக்கற்றவர்கள் அல்ல என்றேன்.

அத்தனை மாணவ& மாணவியரும் ஆழமாகவே சிந்தித்தனர். இத்தனை நாள் கலாம் நல்லவர் என்றல்லவா எண்ணியிருந்தோம் என்று வெட்கப்பட்டனர்.

அப்துல்கலாம் குறித்து நான் மனதுல் உயர்ந்த எண்ணங்களை வைத்திருந்தேன். ஈழப்போரில் குழந்தைகளை மீட்க குரல்கொடுங்கள் என்று கலாமிடம் நேரடியாக கேட்டேன், பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்தார். அன்று தூக்கி எறிந்தேன் அப்துல்காலம் ஒரு சுயநலமற்ற தலைவர் என்ற எண்ணங்களை. இன்று அத்தனை மாணவ&மாணவிகளும் அதை செய்தார்கள். தங்கள் நண்பர்களுக்குள்ளும் இதை பரப்ப துவங்கிவிட்டார்கள்.

கூட்டம் முடிந்ததும் மாலையில் அந்த பத்திரிக்கை ஆசிரியர் அழைத்தார்.

எங்கள் எண்ணங்களில் இருந்த 2 விசயங்களை தலைகீழாக மாற்றிவிட்டீர்கள் என்றார்.

1. வைகோ குறித்த தவறான எண்ணம், 
2. அப்துல்கலாம் குறித்த உயர்வான எண்ணம்.  

Jul 13, 2011

வைகோ உண்மையில் ஒரு கோ தான்

தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவுக்கு நேரகதான் இருக்கும். அரசியல் என்றால் தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்றில்லாமல் சர்வதேச சமுதாயத்தில் தமிழரின் நிலையை எடுத்து சொல்லும் வைகோவின் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலை வணக்கம்.

ஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகளை ஒரு சி.டியாக தயாரிந்துள்ளார் வைகோ. அதை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று தன் கைபட  மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இளம் சமுதாயம் ஈழத்தின் ஈரத்தை மறந்தவிடக்கூடாது. ஈழத்தாகம் என்பது தேசிய தலைவர் பிரபாகரனோடு முடிந்துபோவது அல்ல. ஈழம் அமைந்தே தீரும் என்ற உரத்த குரலை வைகோ தொடர்ந்து பதிவுசெய்வது நிச்சயம் வீனாகாது. 

கோ என்றால் தலைவன் என்று பொருள். நிச்சயம் தமிழர்களின் தலைமகனுக்கான அத்தனை தகுதிகளும் வைகோவுக்கு உள்ளது. வைகோ உண்மையிலுமே ஒரு கோ தான்.

தெற்கு சூடான் அமைந்தது போல நிச்சயம் ஒருநாள் தமிழ்ஈழமும் அமையும். அதற்காக பல்வேறு ரீதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். 

கோவையின் தென்கோடி முதல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து இலங்கை என தற்போது உதித்த தென் சூடான் வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்கள் ஈழத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரும் பணியில் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தூற்றாதீர்கள்...

Jul 10, 2011

தெற்குசூடான் உதயமானதுபோல் தமிழ்ஈழம் மலர வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   

உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்சப் பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில், தெற்குசூடான் சுதந்திரத் தனிநாடு என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தலைநகர் ஜூபாவில் சுதந்திரக்கொடி பறக்கிறது.

சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகி விட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் என்னும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடி கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், கருப்பர் இனத்து சிறுவர்  சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக்கொடியுடன் குதித்து கும்மாளம் இடுவதை, ஊடகத்திரைகளில் காணும் போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும் இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.

தெற்கு சூடான் விடுதலைத் திருநாள் கொண் டாட்டங்களில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பன்னாட்டு அதிபர்களும் பங்கு ஏற்கின்றனர். இந்தியாவும், தன் பங்குக்கு குடியரசின் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்து உள்ளது.

நைல் நதி தீரத்தில் இந்த கருப்பர் நாடு மலர்ந்திட, அம்மக்களின் பொது வாக்குப்பதிவை நடத்தியது. அந்த தீர்வைத்தானே தமிழ் ஈழ மக்கள் இன்று கேட்கிறார்கள். தாய்த் தமிழகத்தின் இளைஞர்கள், கோடிக்கணக்கான மக்கள், அந்த இலக்கை அடைய, உரிமைப்போர், முழக்கம் செய்யும்போது எந்த சக்தி அந்த தீர்வை தடுத்து விட முடியும்? உலகின் மிகப்பழமையான நைல் நதி பாய்ந்தோடும் சூடான் குடியரசு நாடு, முன்னோரு காலத்தில் எகிப்தியப் பேரரசின் ஆதிக்கத்திலும், பின்னர் பிரித்தானியகக் காலனி நாடாகவும் இருந்து, 1956 முதல் சுதந்திர நாடாக ஆயிற்று.

வடக்கு சூடான் பகுதியில் அராபியர்களின் வழித்தோன்றல்களும், நூபியர்களும் வாழ்கின்றனர். தெற்கு சூடான் பகுதியில் கருப்பர் இன மக்களும், இயற்கை வழிப்பாட்டுப் பழங்குடியினரும் வசிக்கின்றனர். வடக்கே இஸ்லாம் மார்க்கமும், தெற்கே கிறிஸ்துவ மார்க்கமும் ஆளுமை கொண்டு உள்ளன. வடக்குக்கும், தெற்குக்கும் இடையே மூண்ட மோதல்களால் 56 முதல் 72 வரை உள்நாட்டுப் போரும், மீண்டும் 83 ல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டன.

1989 ல் திடீர் புரட்சியை நடத்திய ராணுவ தளபதி உமல்அல்பசீர், குடியரசு தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இன்று வரையிலும், அவரே சர்வாதிகாரியாக இருக்கின்றார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானில் தொடர் ராணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலையாகவே அல்பசீர் அரசால் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர்.

 பாய்ந்தோடும் நைல் நதியில் அவர்களின் செங்குருதி கலந்தது. இனக்கொலை நடத்திய அதிபர் உசேன்அல்பசீருக்கு 87 சதவீத ஆயுதங்களை சீனாதான் வாரி வழங்கியது. ரஷியா தன் பங்குக்கு 8 சதவீத ஆயுதங்களை தந்தது. இதெல்லாம் எதற்காக? சூடானின் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிப்பதற்காக.

தெற்கு சூடானில் முதலில் ராணுவத்தில் பணி ஆற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான்கராங், சூடான் மக்கள் விடுதலைப்படையின் தலைவர் ஆனார். 2005 ம் ஆண்டு விமான விபத்தில் அவர் மாண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்ட அழுத்தங்களால், சூடான் அரசும், தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் நய்வாசா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டன. தெற்கு சூடான், தனி நாடாகப் பிரிந்து செல்வதா? அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா? என்பதை 2011 ம் ஆண்டு ஜனவரியில் பொது வாக்குப்பதிவு மூலம் தீர்மானிப்பது என்று முடிவு செய்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி பொது வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அமெரிக்க குடியரசு தலைவர் ஓபாமா, சாட், லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஏதியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். திட்டமிட்டவாறு வாக்குப் பதிவை நடத்தாவிடில் சூடான் நாட்டின் மீது பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், திட்டமிட்டப்படி வாக்குப்பதிவை நடத்தினால் பயங்கரவாத நாடு என சூடான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.

தெற்கு சூடானில்தான் 80 சதவீத எண்ணெய் கிணறுகள் உள்ளன. இந்த எண்ணெய், வடக்கு சூடானின் துறைமுகங்கள் வழியாகத்தான் அயல்நாடுகளுக்கு அனுப்ப முடியும். எனவே தங்கள் துணை இல்லாமல் தனிநாடாக, தெற்கு சூடான் இயங்க முடியாது என்று சூடான் அரசும், அதற்கு துணையாக சில அதிபர்களும் கூறி வந்தது உரிமைச் சம்மட்டியின் அடியால் நொறுங்கிப் போய்விட்டது.

சூடான் ராணுவமும், அரசு ஏவிய ஆயுதப் குண்டர் கூட்டமும் நடத்திய படுகொலைகளால் வீடு, வாசல் இழந்து வடக்கு சூடானில் தலைநகர் கர்டோமைச் சுற்றிலும் உள்ள முகாம்களில் மட்டும் ஏறத்தாழ இருபது லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து இருந்தனர். துன்பத்தில் துடிதுடித்த அந்த மக்களும், இந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க உரிமை கோரியபோது, முதலில் மறுத்த சூடான் அரசு பின்னர் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டது.

உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி வந்து வாக்கு அளித்தனர். 2011 ஜனவரி 9 ந்தேதி முதல் 15 ந்தேதி வரையிலும், ஆறு நாட்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும். அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக்கொண்டு இருந்தன.
 

ஆனால் வாக்குப் பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர் தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர். வாக்கு அளிக்கப்பதிவு செய்து கொண்டோர் 39,47,676 பேர். வாக்கு அளித்தவர்கள் 38,41,994 பேர். செல்லுபடியான வாக்குகள் 38,37,406 பேர். தனிநாட்டுக்கு ஆதரவு 37,92,518 பேர். எதிர்ப்பு 44,888.

தெற்கு சூடான், சுதந்திர தேசக்கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம் திசையெங்கும் கேட்கிறது. ஆனாலும், சூடான் நாட்டுக்குள் எந்த நேரமும் குமுறி வெடிக்கும் என்ற நிலையில், டர்புர் பிரதேசப் பிரச்சினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க இனத்தினரால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். மனித இனத்தின் பேரழிவுகளுள் ஒன்று என்றே உலகத் தலைவர்களுள் பலர் அதை குறிப்பிட்டு உள்ளனர். அங்கும் ஒரு வாக்குப்பதிவை 2012 ம் ஆண்டில் நடத்துவது என தீர்மானித்து உள்ளனர்.

வடக்கு, தெற்கு, மேற்கு டர்புர் பகுதிகளை உள்ளடக்கி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, ஒருங்கிணைந்த டர்புர் மாநிலம் அமைப்பதா? அல்லது தற்போது உள்ளவாறு மூன்று மாநிலங்கள் என்ற நிலையே நீடிப்பதா? என்பதை அந்த வாக்குப் பதிவு முடிவு செய்யும்.

மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் மாநிலம், யாருக்கு சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதால், அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக்கூடும். சூடான் அதிபர் அல்பசீர் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களுக்காக அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று 2004 ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது.

2005 ம் ஆண்டு மார்ச் மாதம், அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க, 2008 ம் ஆண்டு ஜூலை 14 ம் நாள் அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் அல்பீசீரை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. 2010 ம் ஆண்டு ஜூலை மாதம் திஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல்பசீரை இனக்கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளிகளும் அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஐ.நா.மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்படவும், தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம்.

சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

May 7, 2011

தமிழ் பத்திரிக்கைகள் யாருக்காக?

போர் குற்றவாளி ராசபட்சேவை கண்டித்து கோவை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்வை அனைத்து பத்திரிக்கை நிருபர்களும் படம் பிடித்தனர்.

தினகரன் தமிழ்பத்திரிக்கையில் இருந்து விடுபட்டு மலையாள பத்திரிக்கையில் நேற்று தான் பணியில் சேர்ந்தேன். ராசபட்சேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நானும் படம் எடுத்தேன். 

சக நிருபர் ஓருவர் கிண்டல் அடித்தார். தமிழ்பத்திரிக்கைகளே ராசபட்சேவுக்கு எதிரான படத்தை செய்திகளை கண்டுகொள்வதில்லை. மலையாள பத்திரிக்கை நிச்சயம் வெளியிடமாட்டார்கள் என்றார்.

காலை விடிந்தது. எந்த தமிழ்பத்திரிக்கையிலும் படம் வெளிவரவில்லை. மலையாள மனோரமாவில் வண்ணப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.


ராசபட்சேவை போர்குற்றவாளி என்று ஒரு மலையாள பத்திரிக்கையில் பணிக்கு சேர்ந்த முதல் நாளே, முதல் படமாக வெளியிட்டது தமிழனான எனக்கு பெருமையே.

Apr 28, 2011

ராசபட்சேவுக்கான உச்சகட்ட தண்டனை தனிஈழம்

போர்குற்றம் புரிந்த ராசபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் ஒலித்துள்ளது.

திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இ.கம்யூனிசுட்டு, வி.சி, கொமுக, பாரதிய சனதா உட்பட சிறிய பெரிய என அனைத்து கட்சிகளும் தனிஈழம் தான் தீர்வு என்பதை வலியுறுத்த துவங்கியுள்ளன.


காங்கிரசு, மா.கம்யூனிசுட்டு ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பழைய பாடலையே இன்னும் இழுந்துப்பாடி வருகின்றன.  இந்த கட்சிகளும் தங்கள் நிலையை மாற்றியாக வேண்டும்.

இலங்கை என்ற குட்டி நாட்டின் அரசியலில் தலையிட இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தார்மீக உரிமை உள்ளது. 

தமிழருக்கும் சிங்களருக்கும் சமஉரிமை என்ற ஒற்றை கோட்பாடில் தான் இலங்கைக்கு பிரிட்டீசு அரசாங்கம் சுதந்திரத்தை தந்தது. அதே பாணியில் தான் இந்தியாவும் இலங்கையை செல்லப்பிள்ளையாக வளர்த்தது.

ஆனால் இலங்கையோ இனப்படுகொலையில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது. 


சிங்களருக்கு தேவை ஏக சிங்கள நாடு. அதற்காக தமிழகர்கள் சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக இருக்க முடியுமா? 

தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள் உரக்க சொல்கிறார்கள். இதை இன்றைய காங்கிரசாருக்கும் மா.கம்யூனிசுட்டுகளுக்கும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்கள் போரில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படித்துள்ளோம். ஆனால் இன்றைய 21நூற்றாண்டு தலைமுறையினர் நாம் நேரடியாக அதை பார்க்கிறோம். 

மனிதஉரிமைகளை பற்றி பெருமைபேசும் சர்வதேச சமுதாயம் இலங்கை என்ற குட்டி நாட்டில் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்தது. 

போரில் லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த பின்னர் மனித உரிமைகள் பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

சர்வதேச சமதாயத்திற்கு உண்மையில் மனிதஉரிமைகள் குறித்த அக்கறை இருக்குமானால் பழிக்குபழி அல்ல நிரந்தர தீர்வை தான் வலியுறுத்த வேண்டும். 

தனிஈழம் ஒன்று தான் மனித உயிர்களை குடித்த ராசபட்சேவுக்கு கொடுக்கும் உச்சகட்ட தண்டனையாக இருக்க முடியும். அதே தனிஈழம் தான் விடுதலைப்புலிகளின் ஆன்மாக்களை சாந்தியடையச்செய்யும் கருவாகவும் அமையும்.

தனிஈழம் தமிழக அரசியல்கட்சிகள் நிலை


திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இ.கம்யூனிசுட்டு, வி.சி, கொமுக, பாரதிய சனதா இத்தனை கட்சிகளும் தனிஈழம் அமைக்கவேண்டும் என்று சொல்கின்றன. 

காங்கிரசு, மா.கம்யூனிசுட்டு ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஒன்றுபட்ட இலங்கை என்ற பழைய பாடலையே இன்னும் இழுந்துப்பாடி வருகின்றன.  

இலங்கை என்ற குட்டி நாட்டின் அரசியலில் தலையிட இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தார்மீக உரிமை உள்ளது. 

தமிழருக்கும் சிங்களருக்கும் சமஉரிமை என்ற ஒற்றை கோட்பாடில் தான் இலங்கைக்கு பிரிட்டீசு அரசாங்கம் சுதந்திரத்தை தந்தது. அதே பாணியில் தான் இந்தியாவும் இலங்கையை செல்லப்பிள்ளையாக வளர்த்தது.

ஆனால் இலங்கையோ இனப்படுகொலையில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது.

இலங்கையில் தனிஈழம் தான் தீர்வு என்று கம்பீரமாய் முழங்கினார் இந்திராகாந்தி. இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்ததை மறந்துவிடக்கூடாது.

தனிஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள் உரக்க சொல்கிறார்கள். இதை இன்றைய காங்கிரசாருக்கும் மா.கம்யூனிசுட்டுகளுக்கும் புரிந்துகொள்ள மறுப்பது தான் வேதனையாக உள்ளது.

மிச்சம் இருக்கும் மனிதஉயிர்களை காக்கவாவது தனிஈழத்துக்கு ஒருமித்த குரல்கொடுங்கள்.

Apr 22, 2011

ஈழம் எட்டாக்கனியாகுமா? மலையாள ஊடகங்கள்


இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் கசப்பான உண்மையாகவே தெரிகிறது. 

ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது உலக தமிழர்கள் சக்திக்கு மீறி போரட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் ஒன்றுபட்ட போராட்டம் இல்லை என்பதால் அத்தனை போராட்டங்களும் வீணாக முடிந்தது.

ஆளுக்கு ஒரு போராட்டம். தமிழகத்தில் ஒன்றுக்கு ஒன்றான போட்டி போராட்டங்களே உண்மையான நோக்கத்தை சீர்குலைத்தது. 

பத்திரிக்கையாளர்கள் நடத்திய போராட்டத்தில் கூட சங்கத்துக்கொரு போராட்டம் நடத்தினரே தவிர ஒன்றுபட்டு ஒட்டுமொத்தமாக யாரும் போராடவில்லை. இது ஈழத்துக்கான போராட்டமே தவிர நம்மில் யார் பெரியர் என்பதற்கான போராட்டம் அல்ல என்று யாரும் நினைக்கவில்லை.

தமிழகத்தில் போராட்டம் தோற்றதற்கு ஒற்றுமை இல்லை என்பது தான் கராணம். அதுதான் ஈழத்திலும் நடந்தது.

இலங்கை அரசாங்கத்தின் போர்குற்றத்திற்கான ஐ.நா அறிக்கையை எதிர்த்து ஈழத்தமிழர்களே(கருணா குழு)போராடுகிறார்கள் என்றால் எங்கே தனிஈழம் அமையும்?

நேரடியாக சம்மந்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரே நாங்கள் பாதிக்கப்படவில்லை, விடுதலை அடைந்துள்ளோம் என்று உரக்க கூவுவது கொஞ்சம் யோசிக்க வைக்கிறதே.

விடுதலைப்புலிகளின் தோல்வியை விரும்புகிறவர்கள் தனிஈழத்தின் தோல்வியையும் ஊக்குவிக்கலாமா? அப்படியானால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

மலையாள தொலைகாட்சி ஏசியனெட் செய்திகள் இப்படி முடித்திருந்தது

ராசபட்சேவின் நோக்கம் விடுதலைபுலிகளை ஒழிப்பது அல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிப்பது தான். அதற்கு இலங்கை தமிழர்களே துணை நிற்பது தான் சர்வதேச சமுதாயத்தின் மவுனத்திற்கு காரணம். என்று கூறி வாழ்க ஈழ தமிழகம் என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். 

கேரளாவில் பெரிய மக்கள் ஊடங்களில் தனிஈழம் பாடல்கள் கம்பீரமாக ஒலிக்கின்றன. ஆனால் நமது தமிழக ஊடகங்களோ விடுதலைபுலிகள், தனிஈழம் குறித்து பேசவே பயப்படுகின்றன. 

மலையாள ஊடகத்திற்கு தெரிகிறது தனிஈழத்தின் அவசியம்.  நாமோ ?

Apr 11, 2011

ஈழத்தமிழர்களுக்கு வாக்காளர் காட்டும் சிறு அக்கறை


வாக்களிக்கும் முன்னர் இந்த படங்களை எப்படியாவது ஒருமுறையேனும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு காண்பியுங்கள்....

படங்களை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்


http://thamizhaathamizhaa.weebly.com/

Mar 14, 2011

வைகோ மூன்றாம் அணி வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்


இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

அதிமுக அணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டால் நிச்சயம் இழப்பு அதிமுகவுக்கு தான். எதாவது ஒரு பலமான கட்சி மூன்றாவது அணியாக போட்டியிடாதா என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது திமுக. 

அதிமுக அணியில் இருந்து மதிமுக பிரிவதால் 1. எதிரணி பலவீனம் அடையும், 2. ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும். 3. ஈழம் ஆதரவு வாக்குகள் அதிமுக அணிக்கு போகாது. 4. வைகோவின் எதிர்மறை பிரச்சாரம் அதிமுகவை பலவீனப்படுத்தும். 5. தேர்தலுக்கு பின்னர் திமுக பக்கம் மதிமுகவை இழுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி 5 வித பலனை அனுபவிக்க திமுக காத்திருக்கிறது.

அதிமுக அணியில் தற்போது வாக்குவங்கி அடிப்படையில் வெற்றிக்கான போதிய பலம் உள்ளது. ஆனால் பிரச்சாரம் மூலம் கிடைக்கும் கடைசிகட்ட ஆதரவு மற்றும் வாக்கு சிதறல் வெற்றியை வெகுவாகவே பாதித்துவிடும்.

ஈழம் ஆதரவு அமைப்புகள் மற்றும் வாய்ப்பு கிடைக்காத பலகட்சி அதிர்ப்தி வேட்பாளர்களை ஒன்றினைத்தால் அது நிச்சயம் அதிமுகவுக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

திமுக அணியை பொருத்தவரை அவர்கள் தெளிவான வாக்குவங்கியை குறிவைத்துள்ளார்கள். திமுகவுக்கு தற்போதைய ஒரே தேவை மூன்றாம் அணி. அது வைகோ மூலம் கிடைத்துவிட்டால் திமுகவின் வெற்றி உறுதியாக்கப்பட்டுவிடும்.

வட மாவட்டங்களில் நல்ல பலத்துடன் களம் இறங்குகிறது திமுக. தென் மாவட்டங்களிலும் காங்கிரசு உதவியுடன் கொஞ்சம் கரை காண்கிறது. ஆனால் மேற்கு மற்றும் கடலோர பகுதிகளில் திமுக பலவீனமாக உள்ளது. 

கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் வாக்கு செயலலிதாவுக்கு வராது. அதே நேரத்தில் வைகோ மூன்றாம் அணியாக போட்டியிடும் போது மீனவர் பிரச்சனை காரணமாக திமுகவுக்கம் போய்சேராது.

விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மதிமுக பலமாக உள்ளது. அதே போல கடலோர மாவட்டங்களிலும் கொஞ்சம் செல்வாக்கு கூடியுள்ளது. இங்கு மட்டும் கவனம் செலுத்தி போட்டியிட்டால் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் வரை வெற்றிவாய்ப்பு உறுதியாக உள்ளது.

அதிமுக அணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதை விட மூன்றாம் அணியாக தனித்து போட்டியிடுவது மதிமுகவுக்கு கூடுதல் பலம். 

நடுநிலை வாக்காளர்கள், செயலலிதா&கருணாநிதி எதிர்ப்பு, ஈழம் ஆதரவு வாக்குகளுடன் மீண்டும் ஒருமுறை மதிமுக தனது 10 % வாக்குவங்கியை உறுதிசெய்யலாம்.

தற்போது செயலலிதாவை விட்டு பிரிவதால், கருணாநிதிக்கு பின்னரான திமுக விரிசல் மதிமுகவுக்கு நல்ல பலனை தரும்.

Mar 11, 2011

கண்ணீர்விட்டு அழுத கருணாநிதியின் 2ம் மனைவி


சி.பி.ஐ விசாரனைக்கு செல்லும் முன்னர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் கருணாநிதியின் 2ம் மனைவி தயாளு அம்மாள். பல அரசியல் நெருக்கடி, சிறைவாசத்தின் போதும் தன் மனைவி பிள்ளைகளை காப்பதில் நல்ல கணவனாகவும், தந்தையாகவும் இருந்துள்ளார் கருணாநிதி. ஆனால் காங்கிரசிடம் மாட்டிக்கொண்ட இந்த தருணத்தில் விழுபிதுங்கி நிற்கிறார்.

கனிமொழி ராசாத்தியம்மாளோடு போக வேண்டிய சி.பி.ஐ விசாரனை தன்னை வட்டமிட்டதை தயாளு அம்மாளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, கணவனை கடந்து சுடாலின், அழகிரி வரை அழுது தீர்த்துள்ளார்.

இறுதியில் வேறு வழியில்லை, அண்ணா அறிவாலையத்தில் தான் விசாரனை என்று சமாதானப்படுத்தியுள்ளார்.

செயலலிதாவால் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது கூட இப்படி ஒரு மனஉளைச்சலுக்கு ஆளானதில்லை கருணாநிதி குடும்பம். ஆனால் இன்று சோனியாவின் காலடியில் சுடுபாறை புழுவாய் தவிக்கின்றனர்.

அடுத்த விசாரனை டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் என்பது தான் திமுகவுக்கு சீரணிக்க முடியாத வலி.

தன்மானம், சுயமரியாதை, தொகுதி, ஆட்சி என அத்தனையையும் விட்டுக்கொடுத்தும் மனைவி குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார்.

செயலலிதாவுடன் மோதிய மோதல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அடுத்தடுத்து சோனியாவுடன் மோதும் இறுதி யுத்தம் தான் கருணாநிதி சரியான சம்மட்டி அடி.

காலம் கடந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது கருணாநிதிக்கு வாய்ப்பு. காங்கிரசை தூக்கி எறிந்து ஈழம் பக்கம் கொஞ்சம் பார்வையை திருப்பினால் போதும்.

தமிழர்கள் மன்னிக்கும் குணம் நிறையவே பெற்றவர்கள்.....

Mar 10, 2011

63=0 தயாராகட்டும் சீமான் படை


தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான்.

என்ன பெரிய சீமான் தேர்தல் நேரத்தில் பிடித்து சிறையில் போட்டுவிட்டால் சுருதி அடங்கிவிடும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் கோவையில் நாம்தமிழர் கட்சியின் நடத்திய பொதுக்கூட்டம் அந்த கணிப்பை மாற்றியது.

சீமானை விட வீறுகொண்டு பேசும் ஏராளமான இளம் பேச்சாளர்கள் காங்கிரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பங்களிப்பை அவ்வளவு குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. தமிழ்ர்களுக்கு எதிராக வாய் சவடால் விட்ட இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம் உட்பட காங்கிரசு தலைவர்களை தோற்கடித்து சாதனை படைத்தனர். 

இந்த தேர்தலில் இன்னும் கொஞ்சம் வீரியம் கொண்டுள்ளனர். 

ஈழத்தமிழர்களின் 63 ஆண்டு கனவை தவிடுபொடியாக்கிவிட்டு களம் காண்கிறது காங்கிரசு. கொஞ்சம் கொஞ்சமாய் ஈழ மண் சேர்த்து ஈழநாட்டை கட்டி எழுப்பினர். தனிஈழம் நாட்டுக்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்ககூடிய நேரத்தில் ஒட்டுமொத்தமாக கொன்று குவித்தது காங்கிரசு. அந்த கோரம் காங்கிரசு மீது இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

63 தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது காங்கிரசு என்ற செய்தியை தான் உலகின் பல மூலையிலும் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கிறான்.

அந்த நற்செய்தியை அடைய சீமான் படை இன்னும் இன்னும் வீறுகொண்டு எழவேண்டும்.

திமுக&காங்கிரசு மோதலில் ஏற்கனவே 50% தோல்வி உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் மீதம் உள்ள 50% எட்ட தமிழர் அமைப்புகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும்.

நான் எந்த கட்சியிலும் அமைப்பிலும் இல்லை. ஆனாலும் காங்கிரசை வீழ்த்தும் ஒருங்கிணைந்த தமிழ்ர்படையில் நானும் களத்தில் நிற்பேன்.

Feb 2, 2011

காங்கிரசுக்கு எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?

திராவிட கட்சிகளை கண்டு மிரண்டு கிடந்த காங்கிரசு இன்று அசுரசக்தி பெற்றது எப்படி?

மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசர், மூப்பனார், போன்ற தலைவர்கள் கூட திராவிட கட்சிகளை ஆட்கொள்ளவில்லை. ஆனால் இன்று தங்கபாலு, வாசன், இளங்கோவன் போன்ற தலைவர்கள் திமுகவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறார்கள். இவர்களுக்கு தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு கடுகளவும் இல்லை. அதே போல இந்தி எதிர்ப்பை விட ஈழம் எதிர்ப்பில் காங்கிரசு சுவடற்று கிடக்கிறது. இருந்தாலும் காங்கிரசு திமுகவை மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரசால் உள்ளூர் நபரின் செல்வாக்கு இன்றி ஒரு தொகுயில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று ஆட்சியில் பங்கு என்ற நிலைக்கு வந்துள்ளது.

இது காங்கிரசின் வளர்ச்சியா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். அப்படியானால் இந்த நிலைக்கான காரணம் என்ன?
காங்கிரசு வளர்ச்சி அடையவில்லை அதே நேரத்தில் திமுக மிகபெரிய ஏமாளித்தனத்தை சந்தித்துள்ளது.

கருணாநிதி குடும்பத்தால் காங்கிரசு வளர்ந்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

கருணாநிதி ஏமாளியானதற்காக ஒட்டுமொத்த தமிழனும் ஏமாளியாகிவிட முடியுமா?

ஒரு காலத்தில் கூட்டணி பற்றி பேச டெல்லி இங்கு வந்தது. ஆனால் பிசுகோத்து சோனியாவிடம் கூட்டணி பேச தள்ளுவண்டியில் தள்ளாடி செல்கிறார் கருணாநிதி. இந்திராவிடம் தைரியமாக அரசியல் செய்த கருணாநிதி சோனியாவிடம் வாலாட்டி நாயானது காலத்தின் கொடுமை.

கருணாநிதி இன்னும் நிறைய அனுபவிக்கவேண்டியுள்ளது. 

காலம் திரும்புவதாக காங்கிரசாரின் கணக்கு, தீபம் அணையும்போது கொஞ்சம் அதிகமாகவே பிரகாசிக்கும் என்பது காலத்தின் கணக்கு. 

Jan 14, 2011

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை

எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும்.

இன்னும் காலம் கடந்துபோய்விடவில்லை கவனம் இருக்கட்டும்  ராசபட்சே - சோனியா சோடி.



Jan 13, 2011

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை

தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனைத்திலும் பண்பட்டவர்கள். நாகரீகத்தை தன்னகத்தே கொண்டவர்கள்.

இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியது. இதற்கு உலக அரங்கில் நிச்சயமாக ஒரு தனிநாடு அங்கீகாரம் தேவை.

இது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை.

இந்தியா என்ற நாட்டில் மாநில சுயாட்சி இல்லை. இலங்கையில் சுதந்திரமே இல்லை. இத்தகு நிலையில் தமிழர் பெட்டகங்கள் பாதுகாக்கப்படுமா என்பது கேள்விகுறியே.
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும்.
 இன்னும் காலம் கடந்துபோய்விடவில்லை கவனம் இருக்கட்டும்  ராசபட்சே - சோனியா சோடி.

இந்தியா என்றா நாடு எப்படி உருவாக்கப்பட்டது? இங்கிலாந்தியர் தங்களுக்கு ஒரு வியாபாரசந்தையாக தானே  இந்தியாவை  உருவாக்கினார்கள். வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு சந்தையில் நியாயமான மனித உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு இருக்கும்?

இந்த சந்தையை மக்களாட்சி என்ற ஒற்றை கயிற்றில் கட்டியது சாதனை தான். ஆனால் மக்களாட்சி என்ற போர்வையில் தனி இனங்களின் நியாயமான உணர்வுகளை மழுங்க செய்வது எவ்வளவு பெரிய அநீதி?

தமிழர்கள் ஒன்றும் சகமனிதர்களிடம் பழகத்தெரியாத காட்டுமிராண்டிகளோ, ஆட்சிமுறை, அரசியல், கல்வி, வாணிபம், நிர்வாக கட்டமைப்பு இல்லாதவர்களோ அல்லவே. அப்புறம் ஏன் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி தர இந்தியா மறுக்கிறது. 

இந்தியா மாநில சுயாட்சியை மறுப்பதன் காரணம் என்ன? மீண்டும் ஒரு ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட தானே.

இந்தியா என்ற மாட்டு சந்தையில் அடிமாட்டு விலையில் இருப்பதை விட தமிழன் இறப்பது மேல்.

நிச்சயமாக இன்றைய தமிழர் தலைமுறையினர் இதை யோசித்தேயாக வேண்டும்

தமிழன் என்ற உணர்வை விட்டுவிட்டு இந்தியன் என்ற உணர்வு ஏற்கவேண்டும் என்பது எவ்வளவு பெரிய அடக்குமுறை.

முதலில் நான் தமிழன் பின்புதான் இந்தியன். முதலில் இந்தியன் பின்பு தான் தமிழன் என்றால் எப்படி ஏற்க முடியும்?

இந்தியன் என்ற உணர்வு தோன்றி 60 வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் தமிழர் என்ற உணர்வு தமிழ் மொழி தோன்றியது தொட்டு இருக்கிறது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்தியா என்ன மதிப்பு அளித்துள்ளது? இலங்கை என்ற நாட்டின் நட்புக்காக கொடுக்கும் விலையில் ஒரு துளி சொந்த நாட்டு தமிழர்களுக்கு கொடுத்துள்ளதா?

மாநில சுயாட்சி அதிகாரம் தரப்பட வேண்டும். அது இல்லை என்றால் தனிநாடு அமைப்பது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை. இது இந்திய இறையாண்மைக்கோ, இலங்கை இறையாண்மைக்கோ எதிரானது அல்ல. இது அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது. 

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றால் இந்தி மட்டுமல்ல இந்தியாவின் அடக்குமுறைகளும் துரத்தியடிக்கப்படவேண்டியது தான். 

இந்திய ஒரு சுதந்திரமான நாடுதான். போற்றி புகழதக்க இறையாண்மை கொண்டது தான். ஆனால் சமீபகாலத்தில் அதன் செயல்பாடுகள், குறிப்பாக தமிழர்க்கு எதிரான செயல்பாடுகள் ஒரு அடக்குமுறை போன்றே தோன்றுகிறது.

உணர்வு ரீதியாக சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் உள்ளங்களில் எழுந்துள்ள இந்த சந்தேகத்தை போக்க இந்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?

நான் ஏதோ இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதுகிறேன், பிரிவினையை தூண்டுகிறேன். தேச துரோகம் செய்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

நானும் இந்திய குடிமகன் தான். நானும் உணர்ச்சி உள்ள மனிதன் தான். எனக்குள்ளும் சில உணர்வுகள் இருக்கிறது. அது ஒன்றும் அநீதி அல்லவே. அந்த உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாவிட்டால் இந்த நாட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது?

இதுவரை அம்பேத்கார் படத்தை பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள். சுதந்திரம் தர ஆங்கிலேயர் சம்மதித்து விட்டார்கள். ஆனால் காந்திக்கும் அம்பேத்காருக்கும் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.

காந்தி உண்ணாவிரதம் இருந்து அம்பேத்காருக்கு நெருக்கடி தருகிறார்.

காந்தி என்ற ஒற்றை மனிதரின் உயிருக்காக எங்கள் உணர்வுகளை புதைக்கமுடியாது என்று தைரியமாக நிற்கிறார் அம்பேத்கார்.

அம்பேத்காரின் கோரிக்கை இது தான். ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கா விட்டால் இந்தியாவே தேவை இல்லை என்பது தான்.

அதையே தான் நானும் இன்று வலியுறுத்துகிறேன். இந்தியாவுக்கு இலங்கை தான்முக்கியம் என்றால் தமிழனுக்கு இந்தியா தேவை இல்லை. 

இந்தியை துரத்திய தமிழனுக்கு இந்தியாவை துரத்துவது ஒன்றும் கடினமல்ல.

எங்கள் கோரிக்கை இதுதான். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்திய இறையாண்மைக்கு மட்டும் மதிப்பளியுங்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவை உண்மையான மக்களாட்சி. அது இல்லை அரசியல் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும் என்றால் தமிழர்மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய குடிமக்களுமே மீண்டும் ஒரு சுதந்திரபோராட்டம் நடத்த வேண்டும்.

Jan 12, 2011

ஈழம் ; வைகோ, சீமான் முடிவு சரியானதே

ஈழம், முல்லைபெரியாறு, சேதுசமுத்திர திட்டம், உட்பட பல விடயங்களில் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் ஒரே தமிழக தலைவர் வைகோ. (எனக்கு தெரிந்தவரை) 

அரசியலில் வைகோ போன்ற நபர்கள் தேவை என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்திய நாடாளுமன்றம், சட்டசபைகளில் வைகோ இடம்பெறாதது தமிழர்களுக்கு பின்னடைவே.

வைகோவின் அரசியல் பயணம் தடுமாறியது காலத்தின் நெறுக்கடியாகவே நான் பார்க்கிறேன். வேர்பிடித்துவிட்ட இரு பெரும் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்துவது சாதரனம் அல்ல. சிலநேரங்களில் ஏதோ ஒரு பக்கம் சாயாவிட்டால் கட்சி இழப்புக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். 

தேர்தலில் வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன், சீமான், பெரியார் திராவிடகழகம் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ஈழம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் வெற்றி செயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ சொந்தமாகிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

திமுக காங்கிரசை தோற்கடிக்க எதிரணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகேட்கும் சீமானின் முடிவு 100% வரவேற்க கூடியது தான்.

கருணாநிதியை விட செயலலிதா ஈழத்திற்கு எதிரானவர் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். 

கருணாநிதி எதிர்கட்சியாக இருந்திருந்தால் ஈழப்போரின் போது தமிழகத்தில் மிகப்பெரிய பிராளயமே ஏற்பட்டிருக்கும். ஒருவேளை போரின் வெற்றி புலிகள் பக்கம் கூட திரும்பியிருக்கலாம். ஆனால் அதைவிட அதிகாரம் கொண்ட ஆளும்கட்சியாக இருந்து கருணாநிதி நடத்திய நாடகத்தை எப்படி மன்னிப்பது?

தமிழக மக்களிடம் ஈழம் ஒரு பிரச்சனையே அல்ல என்று அடித்து சொன்ன துணைமுதல்வர் சிடாலின் அதை நீருபித்தும் காட்டிவிட்டார். காங்கிரசுக்கு இதைவிட மிகப்பெரிய தைரியம் வேறு என்ன இருக்க முடியும்?

இந்த தேர்தலில் திமுக-காங்கிரசு கூட்டணி வெற்றிபெறும் என்றால் தமிழகத்தில் ஈழம் மீண்டும் குழிதோண்டி புதைக்கப்படும்.

ஈழம் தமிழர்களின் உணர்வு என்பதை நிரூபிக்க திமுக-காங்கிரசு கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஈழப்போரை நடத்திய காங்கிரசை இந்த தேர்தலோடு தமிழகத்தில் இருந்தே துடைத்தெரிய வேண்டும். அது தான் ஈழம் அமைப்பதற்கான மற்றொரு படி.

செயலலிதா மிகவும் ஆபத்தானவர், ஈழத்துக்கு எதிரானவர், எந்த நேரத்திலும் காங்கிரசோடு கைகோர்த்துவிடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதற்காக ஈழ ஆதரவு கட்சிகள் தனி அணியில் நின்றால் அதைவிட ஈழத்துக்கான பின்னடைவு வேறு ஏதும் இருக்க முடியாது.

போதிய அரசியல் அறிவோ, ஈழம் குறித்த புரிதல்களோ இல்லாத தமிழகத்தில் நிச்சயமாக ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.

Jan 9, 2011

இந்தியாவை சுக்குநூறாக உடைக்க வேண்டும்

சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான்.

அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்கள். ஆனால் இன்று இந்தியாவில் மக்களாட்சி என்ற பெயரில் மீண்டும் ஒரு நபர் ஆட்சியை தானே இருக்கிறது. சுதந்திரம் முதலே போலி இந்தியாவையும் போலி மக்களாட்சியையும் திணித்தது ஏன்? அதை எதிர்த்து தான் தந்தை பெரியார் உள்ளிட்டோர் மாநில சுயாட்சி கொள்கையை முன்வைத்தார்கள். ஆனால் இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுவதே இ¬றாண்மைக்கு எதிரானது என்ற அளவுக்கு வந்துவிட்டது. 

மாநில சுயாட்சி, பஞ்சாயத்து ராசியம், கிராம தன்னாட்சி என்ற அற்புதமான கட்டமைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் 60 ஆண்டுகளாகியும் அது வெறும் ஆவணமாகதானே இருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் கட்டமைப்புகளை படித்துபாருங்கள். அதில் குறிப்பிட்ட மாநில சுய ஆட்சியும் பஞ்சாயத்து ராசியங்களும் எங்கே போயின. ஏன் செயல்படுத்தப்படவில்லை?
மத்திய மாநில அரசுகளின் கைபாவையாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டதன் காரணம் என்ன?

100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் எத்தனை பேருக்கு அரசியல் அறிவு இருக்கிறது. 99 கோடி பேருக்கு அரசியல் அறிவு இல்லை. மீதம் 1 கோடி பேரில் 50 லட்சம் பேர் ஆட்சிபணி அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்ற பெயரில் ஆதிக்க வர்கத்துக்கு கூப்பாடு போடுகின்றனர். 50 லட்சம் பேர் அரசியல்வாதிகள், தொழில்அதிபர்கள் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த ஒரு கோடி பேர் தான் இந்திய மக்களா? இவர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள். மற்றவர்கள் வெறும் வாக்கு இயந்திரம் மட்டும் தானே.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றி தென்கோடியில் உள்ள எனக்கு என்ன தெரியும்? இத்தாலியில் பிறந்து இந்தியாவில் மருமகளான சோனியா குறித்து என்ன தெரியும்? அல்லது மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் எனது எண்ணங்கள், வாழ்க்கைபோராட்டம் எதாவது தெரியுமா? நான் பட்டினி கிடப்பது கூட தெரியாத ஒரு பிரதமர் எனக்கு தேவையா? 
இந்த நாட்டில் எந்த பொருளையும் நான் வரி செலுத்தாமல் வாங்க முடியாது. அப்படி வரி செலுத்தும் எனக்கு போலி ஓட்டுரிமை அல்லாமல் வேறு என்ன உரிமை இருக்கிறது.

என் ஊராட்சி மன்ற உறுப்பினரை என்னால் கண்காணிக்க முடியும், அவரிடம் எனது குறைகளை சொல்ல முடியும். என்னையும் அவரால் நேரடியாக பார்க்க முடியும். ஆனால் அவரே அதிகாரம் அற்றவராக இருந்தால் என்ன செய்வது?

போதிய கண்காணிப்பு இல்லாமல் மக்களாட்சியை செயல்படுத்தியது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். 

இன்று சனநாயகத்தின் நான்கு தூண்களும் யார் கையில் உள்ளது? மக்கள் கையிலா? மக்கள் கண்காணிப்பிலா? எல்லாம் முன்னரே குறிப்பிட்ட அந்த ஒரு கோடி பேர் கையில் உள்ளது. அப்படியானால் சனநாயகத்தின் மொத்த உருவம் இவர்கள் தானே. மக்கள் வெறும் வாக்கு இயந்திரங்கள் மட்டும் தானே. இதை இயக்குவது கூட அவர்களாக இருக்கும்போது இந்த சனநாயகம் எப்படி சுதந்திரமாகும்?

99 கோடி அடிமைகள் கொண்ட நாடு தான் இந்தியா. 1 கோடி பேரின் அடக்குமுறையில் இருந்து மீண்டு வர ஏன் 99 கோடி மக்கள் பயப்பட வேண்டும்? ஏன் இதற்காக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் கூடாது?

எனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் அதிகாரத்தை நான் எப்படி கண்காணிக்க முடியும்?

உதாரணத்துக்கு : 
ஈழப்போருக்கு இந்தியா உதவ வேண்டும் என்று எத்தனை கோடி இந்தியர்கள் சொன்னார்கள்? ஐ.நாவில் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்ககூடாது என்று எத்தனை கோடி இந்தியர்கள் சொன்னார்கள்? 99 கோடி இந்தியர்களா? அல்லது 1 கோடி இந்தியார்களா? 

எனது ஒப்புதலாக எல்லாவற்றையும் இவர்களே செய்கிறார்கள் என்றால் எனக்கு என்ன விலை இருக்கிறது இந்த நாட்டில்?

என்னை கொண்டே என் தாயை கொலை செய்ய சொல்லும் இந்தியாவின் இந்த குரூரத்துக்கு எப்போது முற்றுபுள்ளி வைப்பது?

நான் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான் சட்டங்களையும் மசோதாக்களையும் வகுக்கிறார்கள் என்று வாதிட வருபவர்களிடம் ஒரே ஒரு கேள்வி

இந்தியாவில் உள்ள 802 எம்பி களை எடுத்துக்கொள்ளுங்கள். எதாவது ஒரு எம்பியிடம் கடந்த கூட்டுத்தொடரில் எத்தனை மசோதாக்கள் நிறைவேற்றினார்கள்? நீங்கள் எதற்கு வாக்களித்தீர்கள்? என்ன கருத்தை பதிவு செய்தீர்கள் என்று கேட்டுப்பாருங்கள்.  தெளிவான பதிலை சொல்லும் ஒரு எம்.பி இருந்தால் இந்த நாடாளுமன்றத்துக்கு நான் தலைவணங்குகிறேன்.

எம்பிக்கும் மசோதா என்ன என்று தெரியாது. எம்பியை தேர்ந்தெடுத்தவனுக்கும் தெரியாது. அப்புறம் எதற்கு இந்த இந்தியா?

இந்திய ஆட்சி அதிகாரத்தை புரட்டிபோட வேண்டும். தலைகிழாக மாற்ற வேண்டும். உச்ச அதிகாரம் மக்கள் கையில் கொடுக்கப்பட வேண்டும். 

1 கோடி பேர் கையில் உள்ள ஆட்சி அதிகாரத்தை சுக்கு நூறாக உடைத்து 100 கோடி பேருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். 

அதற்கு என்ன வழி? சேர்ந்து யோசிப்போம்

Popular Posts