‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். தக்க சமயத்தில் மீண்டும் ஈழப்போரை ஏற்று நடத்துவார் என்பது வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களின் வாதம். இவர்களின் ஆணித்தரமான பேச்சு பிரபாகரன் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.
சக்கரை நோயால் அவதியுற்று இருந்த பிரபாகரன் மீண்டும் பழைய யுத்வேகத்துடன் களத்தில் இறங்க சில ராசதந்திர நடவடிக்கைகளை கையாண்டாக வேண்டும். உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருவதாக பலரும் நம்புகின்றனர்.
உலகநாடுகளிடம் நீலிக்கண்ணீர் வடித்து ஆயுதங்களையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டார் ராசபட்சே. போர்நெறிகளை மீறி நச்சுகுண்டுகளை பயன்படுத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவிப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட இந்த கொடூரத்தை சர்வதேச சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈழம் இறுதிபோரின் முதல்சுற்று தோழ்விக்கு இதுதான் முக்கிய காரணம்.
அடுத்து ஈழம் அமைய ஒரே வழி இந்தியா(தமிழகம்).
இலங்கை இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்து கொடுக்க இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.
ராசிவ் கொலை என்ற ஒற்றை பேச்சில் ஈழத்தை அழித்து வருகிறது இந்தியா. இந்த பேச்சை மாற்றும் சக்தி தான் ஈழம் இறுதிப்போரின் இரண்டாம் பாகம். இந்த ஆயுதம் தயாராகி விட்டால் மருத்துவ ஓய்வில் இருக்கும் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றி உலகை உரைய வைப்பார்.
காலம் கணிகிறது. காத்திரும்போம் ராசபட்சேவின் நரிவேசம் கலையும் கனத்துக்காக.
இந்தியாவின் மீது வெறுப்பை கொட்டி தீர்க்கும் உலக தமிழர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவூட்டுகிறோம்
‘‘இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.’’
‘‘ ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்தை விட, 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து தான் மிக முக்கியமானது.’’
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
இனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி
ReplyDelete