விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இதன் பின்னனியில் இந்தியாவின் ராசதந்திரம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இறப்பு சான்றிதழை கொடுக்க இலங்கை தயங்குவது எந்த ராசசந்திரத்தின் அடிப்படையோ, அதை எதிர்கொள்ளும் முன்கூர் நடவடிக்கை தான் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பு.
இந்திய பெருங்கடலில் இலங்கையை காரணமாக வைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை இந்தியாவும் மேற்குலக நாடுகளும் விரும்பவில்லை. நமட்டு சிரிப்புடன் இந்தியா எனது நண்பன் என ராசபட்சே சொல்லிக்கொள்வது ஒரு ஏளனம் என்பது இந்தியாவுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.
சீனாவை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவுக்கு நல்லபிள்ளையாகிக்கொள்ள ராசப்டசே ஒன்றும் தெரியாத பிள்ளை இல்லை. இந்தியாவின் அதிகார பீடம் ராசீவ் குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல என்பது ராசபட்சேவுக்கு தெரியும். என்றாவது ஒரு நாள் ஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி காட்டும் என்பதும் ராசப்டசேவின் அச்சம். இதற்காகவே சீனாவின் பிடியை இன்னும் இறுக்கிக்கொள்கிறது இலங்கை.
ஆனால் இந்தியாவின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ, அது இன்று கேள்விக்குறியாக உள்ளது. எதற்காக விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதங்களை அள்ளி கொடுத்தார்களோ அதுவும் கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இலங்கை என்ற நண்பன் இந்தியாவை காட்டிக்கொடுக்கும் கருணாவாகிவிடுவான் என்ற அச்சம் இந்தியாவுக்கு வர ஆரம்பித்து விட்டது.
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்பது இலங்கையின் சிரம்தாழ்ந்த கோரிக்கை. அதே ரீதியில் தான் இந்தியாவும் இங்ககையிடம் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ளும் கோரிக்கையை வைத்திருக்கிறது.
ஒன்றுக்கொன்று இறுக்கி இழுக்கும் இந்த கோரிக்கை முடிச்சு அவிழ்ந்துவிட்டால், இருநாடுகளும் உச்சகட்ட எதிரிளாகிவிடுவார்கள்.
விடுதலை புலிகளை வளர்த்துவிட்டவர்கள் யார் என்பதை இலங்கை மறந்துவிடவில்லை. அதேபோல இன்னொரு ஈழப்போருக்கு இந்தியா பின்னனி வகுக்க தயாங்காது என்பதையும் இலங்கை யோசிக்காமல் இல்லை.
எவ்வளவு நாள் தான் இந்தியாவிடம் பணிந்திருப்பது? இலங்கை வெகுநாட்களுக்கு முன்பே யோசிக்க துவங்கி விட்டது. ஆனால் இந்தியா இப்போது தான் சுதாகரித்துக்கொண்டுள்ளது.
எவ்வளவு நாள் தான் சீனாவிடம் ஒட்டாதே என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொடுப்பது? தடையை நீக்கமாட்டோம், நீக்கமாட்டோம் என்ற பரிவுப்பேச்சுக்கு இலங்கை தந்த பரிசு நமட்டு சிரிப்பு மட்டுமே.
அடுத்து ஏன் தடையை நீக்கக்கூடாது என்ற பூச்சான்டி காட்டும் வித்தையை இந்தியா கையில் எடுத்திருக்கிறது.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு பின்னால் உள்ள ராசதந்திரமும் இது தான்.
இந்த பூச்சான்டிக்கு இலங்கை பயப்படுமா? அல்லது இதற்கும் நமட்டு சிரிப்பு மட்டும் தான் பதிலா? இதை பொருத்தது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதும், நீட்டிக்கப்படுவதும்.