இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர்.
கோவை வாளையாரில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தில் ரதீசு பயிணித்துள்ளார். 52 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். கஞ்சிக்கோடு அருகே வந்தபோது பேருந்தை மறித்து ஏறிய 10 பேர் கொண்ட கும்பல் ரதீசை வெட்டி கொலைசெய்துள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பாலக்காடு போலீசார் கூறுகையில் ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பாரதிய சனதா மற்றும் டி.வை.எப்.ஐ அரசியல் கட்சிகளிடையே மோதல் நடந்தது. கொலை செய்யப்பட்ட ரதீசு பாரதிய சனதா கட்சியில் பொருப்பில் உள்ளவர். எனவே இது அரசியல் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் பா.ச.க.,வினர் பந்த் அறிவித்துள்ளனர். இதனால் இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது.
எப்போதும் வாகன நெரிசல் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (எண் 47) ஒடும் பேருந்தை மறித்து பேருந்தில் உள்ள 50 பேர் முன்னிலையில் ஒருவரை கொலைசெய்ய முடிகிறது என்றால் என்னவென்று சொல்வது?
பகையை, கொலை, வன்முறை இவற்றை வளர்க்க தான் அரசியல்கட்சிகள் என்றால் முதலில் மூடுவிழா கொண்டாட வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
காங்கிரசு தொகுதிகள் பட்டியல் - 2011 1. திருத்தணி 2. பூந்தமல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க நகர் (தனி) 5. ராயபுரம் 6. ...
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...
-
சில விசயங்களை இப்படி இலைமறைகாயாக தான் எழுத முடியும். புரியாத பகுதிகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் எதாவது ஒரு பெயரிலி (அனானி) மூலம் விளக்கம் க...
-
சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலை செயலலிதா வெளியிட்டுள்ளார...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இ...
No comments:
Post a Comment