பதிவுக்கு தமிழ்மணத்தின் கட்டண சேவை தவறானது என்பது பதிவர்களுக்கு புரியாமல் போனது வேதனையே.
தமிழ்மணத்தின் முதல்பக்கம் முழுவதும் கட்டணசேவையில் அலங்கரித்து நிற்கும்போது அதை பதிவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
தவறுகளுக்கு பத்திரிக்கைகளுக்கு ஒரு நியாயம் தமிழ்மணத்துக்கு ஒரு நியாயம் கற்பிப்பது பதிவர்களின் சுயநலத்தையே காண்பிக்கிறது.
ஏன் தமிழ்மணத்தின் தவறை சுட்டிக்காட்டும் தைரியம் பதிவர்களுக்கு இல்லை? அப்படியானால் சமுதாயத்தை விமர்சிக்க பதிவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? பதிவு என்றால் மொக்கையும் கும்மியும் மட்டுமே என்றால் நான் பதிவுலகில் இருந்து விடைவாங்கி கொள்கிறேன்.
பத்திரிக்கை தர்மம் சீர்கெட்டுபோனது எப்படி தெரியுமா? இதே கட்டண சேவையால் தான். செய்திக்கு பணம் வசூலித்தார்கள். பணம் செலுத்தினால் எந்த செய்தியையும் முதல்பக்கத்தில் வரவைக்க முடியும். செய்தி முடிவில் ADVT என்று போட்டிருப்பார்கள். கவனிக்காதவர்கள் நாளை செய்திதாள் படிக்கும்போது கவனியுங்கள். காரணம் கட்டண சேவை. இது செய்தியை நம்பி படிக்கும் வாசகர்களுக்கு செய்யும் தூரோகம் அல்லவா?
கோயிலில் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் உண்மையான பக்தர் கூட்டம். பணக்காரர்கள் கோயில் நுழைவுவாயுலுக்கே காரில் வந்து இறங்குவார்கள். நேரடியாக சாமியை சென்று தரிசிப்பார்கள். காரணம் கட்டண சேவை. அவர்களால் தான் கோயிலுக்கு நிதி அளிக்கிறார்களாம்.
கட்டணத்துக்கும் சேவைக்கும் உள்ள வேறுபாடு பதிவர்களுக்கும் புரியாமல் போனது வேதனையே
விளம்பரம் வேறு, சேவை வேறு இந்த இரண்டுக்கும் முடிச்சுபோடக்கூடாது.
பதிவுகளை திரட்டுவதற்கு என்று ஒரு களம் உள்ளது. அதில் விளம்பரத்தை காண்பிக்கலாம். ஆனால் கட்டணம் தரும் பதிவுகளுக்கு அதே சாயலில் பின்வண்ணம் தருவது தவறு. இது அந்த களத்தின் தரத்தையும் நம்பிக்கையையும் குறைக்கிறது. செய்தியை காட்டி பணம் சம்பாதிக்கும் பத்திரிக்கைகளுக்கும் பதிவை காட்டி பணம் சம்பாதிக்கும் தமிழ்மணத்திற்கும் என்ன வேறுபாடு?
பதிவர்கள் எல்லாம் கட்டணம் செலுத்தினால் தமிழ்மணத்தில் முகப்பு பக்கத்தில் கட்டணசேவைகள் தான் இருக்குமே தவிர சேவை எதுவும் இருக்காது.
நான்கு நண்பர்கள் இணைந்து சொந்த நிதியில் தமிழ்மணம் சேவையை தருவதை மனமார பாரட்ட வேண்டும். இதற்கு நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
சென்ற வாரம் எனது பதிவுகள் அனைத்தும் சூடான பதிகளில் இருந்தன. எனக்கே வியப்பாக இருந்தது. உண்மையில் இதற்கு தகுதியானது தானா இந்த பதிவுகள் என்ற சந்தேகம் கூட வந்தது.
திங்கள் முதல் சனி வரை சூடான பதிவில் காட்டிவிட்டு ஞாயிற்று கிழமை சுட்டியையே துண்டித்துவிட்டார்கள். என்ன காரணம் என்பது தெரியாமல் குழம்பி இருந்தேன். என்னால் புதிய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. உங்கள் பதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற பதில் வந்தது.
அட இதற்கு தான ஒரு வாரம் சூடான பதிவில் வைத்து சூடேற்றியுள்ளார்கள் என்பது அப்போது தான் புறிந்தது.
இது மிகமிக தவறான செயல். தமிழ்மணத்தின் இந்தபோக்கை பதிவர்கள் அனுமதித்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
கொதித்துபோயிருந்த எனக்கு தமிழ்மணத்தில் இருந்து வந்த மின்னஞ்சல் இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
என் பதிவை துண்டிப்பதற்கு முன்னர் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள் என்றால் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் துண்டித்துவிட்டு விளக்கம் கேட்பது அநீதியே.
விளம்பரத்தை விளம்பரமாக வாங்குங்கள். பதிவை பதிவாக திரட்டுங்கள். அதுதான் உண்மையான சேவை. பதிவுக்கு இடையில் விளம்பரத்தை விளம்பரமாக காட்டுங்கள். பதிவையே கட்டணசேவை எனபிரித்து காட்டுவது தவறான போக்கு. நாளடைவில் இது தளத்தின்மீதனான நம்பிக்கையை குறைத்துவிடும்.
எது சரி எது தவறு என்பதை படமாக காண்பித்திருக்கிறேன்.
தமிழ்மணம் நிச்சயம் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சேவை என்ற பெருமையை தார்மீகமாக இழக்க நேரிடும்.
பத்திரிக்கைகளை, அரசியல்வாதிகளை குற்றம் சொல்லும் பதிவர்கள் தமிழ்மணத்தின் தவறையும் சுட்டிகாட்ட வேண்டும். காரணம் தமிழ்மணம் என்பது முழுக்க முழுக்க பதிவர்களை மட்டுமே சார்ந்துள்ள இணையதளம். இதன் ஆசிரியர்களும் வாசகர்களும் பதிவர்கள் மட்டும் தான்.
பின்குறிப்பு : தமிழ்மணத்தில் எனது பதிவின் இணைப்பை துண்டித்துவிட்டுதான் எனக்கு கட்டணசேவை குறித்து மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பதை பதிவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
இது ஒரு நாள் உங்களுக்கும் சம்பவிக்கும்போது தான் புரியும். காரணம் சொல்லாமல் செல்பேசி இணைப்பை, இணைய இணைப்பை துண்டித்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமா...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
யுனிக்கோடு எழுத்துருவை பிற எழுத்துருவாக மாற்ற முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல யுனிக்கோடு எழுத்துரு...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
எந்திரன் கதை திருடப்பட்டதா? அமுதா தமிழ்நாடன் கதையை படித்துவிட்டு நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்... ( 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய இந்...
-
கோவை, திருப்பூர், வலைபதிவர் கவனத்திற்கு.... கோவையில் இருந்து தற்போது வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மலர் வாரசெய்தி இதழ், வரும் தை திங...
-
இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்...
ஓசை செல்லா,
ReplyDeleteஏன் இந்தக் கொலைவெறி?
நீங்க வலைத்தளம் ஆரம்பிக்கும்போது திரட்டிகளை நம்பி ஆரம்பிச்சிங்களா? இல்ல உங்கள் எழுத்துக்களை நம்பி ஆரம்பிச்சிங்களா?. தயவு செய்து உங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். திரட்டிகள் தயவு இல்லாமலே பல வலைப்பதிவர்கள் எழுதி வருகின்றனர். தமிழ்மணம் அரசாங்கம் இல்லை அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க, நீங்களாக அவர்கள் சேவை பிடித்துப்போய்தான் அதில் உங்களை இணைத்தீர்கள் இப்போது அவர்கள் பணம் கேட்க்கிறார்கள் என்றவுடன் எதிர்த்து குரல் கொடுப்பது சரியாகப்படவில்லை. தமிழ்மணம் எதிர்பதிவுகளை தயவு செய்து நிறுத்திவிட்டு உங்கள் தினசரி வேலையை கவனியுங்கள். உங்கள் எழுத்துக்களை பலர் படித்துவருகின்றனர்.
ReplyDeleteஉங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.
தமிழ்மணத்தின் ஆரம்ப கால வரலாறே அப்படித்தான். தமிழ்மணத்தின் ஆரம்ப நிறுவனராகிய காசி .அவர்கள் திரட்டியை ஆரம்பிக்கும்போது பதிவர்களை தன் மனதில் உள்ளதை வெளியாக்காது, பதிவர்களை ஏதோ பெரிய இலவச சேவை என சேர்த்து விட்டு, பதிவர்கள் கூட்டம் அதிகமாகிய போது அயோக்கிய தனமாக எந்த அறிவிப்பும் இன்றி தற்போது இருப்பவர்களிடம் அதிக பணத்திற்கு விற்று விட்டு ஓடி விட்டார். இது ஆரம்பகால பதிவர்கள் அனைவருக்கு நன்றாகவே தெரியும். இதெல்லாம் ஒரு பிழைப்பு. சேவை சேவ்ஐ என்பதெல்லாம் சும்மா வெத்து வேட்டு. முடிந்தவரை ஆதாயம் பார்ப்பதே இன்றைய திரட்டிகளின் முழு முதற்வேலை.
ReplyDelete