Showing posts with label தேர்தல் கருத்துகணிப்பு. Show all posts
Showing posts with label தேர்தல் கருத்துகணிப்பு. Show all posts

Apr 29, 2011

திமுகவுக்கு வாய்ப்பு: கெட்லைன்டுடே கருத்துகணிப்பு

ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க நூலிலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 48% வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அதிமுக கூட்டணி 47% வாக்குகள் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணி 115 முதல் 130 இடங்கள் வரை கைபற்றும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 இடங்கள் வரை கைபற்றும் எனவும் கெட்லைன்சு டுடே கணித்துள்ளது.

வாக்குபதிவுக்கு முந்தைய கருத்து கணிப்பில் அதிமுக அணி 164 இடங்கள் வரை கைபற்றும் என கெட்லைன்சு டுடே அறிவித்திருந்தது. வாக்குபதிவுக்கு பிந்தைய அலசலில் திமுக கூட்டணி 130 இடங்கள் வரை கைபற்றும் என தெரிவித்துள்ளது. 

Apr 17, 2011

கேரளா சட்டசபை தேர்தல்-கருத்துகணிப்பு


கேரள மாநிலத்தில் ஏப்.13ல் வாக்குபதிவு நடந்துமுடிந்துள்ளது. கேரள தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மிக எளிது. கண்ணை மூடிவிட்டு சொல்லிவிடலாம் எதிர்கட்சி தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என. 50 ஆண்டு கால வரலாற்றில் அது தான் நடந்து வருகிறது.

ஆளும் கம்யூனிசுட்டு கூட்டணி அடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்பது வழக்கமான அரசியல் ஆருடம். ஆனால் இம்முறை இதற்கு மாற்றம் வரும் என்கின்றனர் பல அரசியல் நோக்கர்கள். 

தென்னிந்தியாவில் அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது கேரளா. இலவச வண்ண தொலைகாட்சி தவிர தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் கேரளாவில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 

கேரளாவை பொருத்தவரை கூட்டணி வெற்றிக்கு அவ்வளவாக உதவாது. பொதுமக்கள் வாக்களிப்பே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.

விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் கொலைகள் இடதுசாரி ஆட்சிமீது எதிர்ப்பை பதிவு செய்கிறது. இதை ஈடுகட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்ற தேர்ந்த பிரச்சாரத்தை விதைத்துள்ளது இடதுசாரி கூட்டணி.

இம்முறை தங்களுடைய சுற்று என்ற தைரியத்தில் காங்கிரசார் தேர்தல் வேலையில் சுனக்கம் காட்டியது  யோசிக்க வைக்கிறது. பெரிய அதிருப்தி இல்லை, நலதிட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரலாற்றை மாற்ற இடதுசாரி தீவிரம் காட்டியுள்ளது. தேர்தல் யுக்தியாக அச்சுதானந்தன் என்ற ஒற்றை மனிதரை வைத்து கொஞ்சம் ஆதரவை திரட்டியது கம்யூனசுட்டுக்கு கூடுதல் பலம் 

பாலக்காடு, திருவனந்தபுரம், ஆழப்புழா, வயநாடு, உட்பட மாவட்டங்களில் இடதுசாரி கொடி உயர பறக்கிறது.  

மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் வெற்றிபெற வேண்டும். 

இடதுசாரி கூட்டணி ....60-71
காங்கிரசு கூட்டணி .....69-80

என்ற இழுபறி நிலையிலேயே வெற்றிவாய்ப்பு அமையக்கூடும் என்று கணிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

Apr 16, 2011

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு-தமிழ்நாடு


தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை வாக்கு சதவீதம் கூடியுள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது. 

வாக்குசதவீதம் அதிகமாகும் பொது திமுக வெற்றிபெற்றது என்பதைவிட எதிர்கட்சி வெற்றிபெற்றது என்பது தான் உண்மை. வாக்குசதவீதம் அதிகமாகும்போது ஆளும்கட்சி மீதான எதிர்ப்பே அதிகமாக பதிவாகியுள்ளது. வாக்குசதவீதம் அதிகமான தேர்தல்களில் திமுக எதிர்கட்சியாகவே களம் கண்டு வெற்றிபெற்றுள்ளது. ஆதனால் தான் இந்த முறை திமுகவுக்கு கிலிபிடித்துள்ளது.

 இந்த தேர்தலில் பெண்கள், இளைஞர்கள், மேல்மட்டத்தினர் வழக்கத்தை விட அதிகளவில் வாக்குசெலுத்தியுள்ளனர். நலத்திட்டங்களை தாண்டி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் போன்றவை பெரிதாக பேசப்படுகிறது இந்த வாக்குவங்கியில்.

கட்சி வாக்குவங்கியை பொருத்தவரை திமுக அதிமுக இரு கூட்டணியும் சமநிலையிலேயே உள்ளன. மதிமுக போட்டியிடாமை, திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தல் இந்த இரு காரணங்களால் இந்த சமநிலை வருகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் திமுக கூட்டணி கட்சி வாக்குவங்கியில் தோல்வியை பதிவுசெய்கிறது.

பொதுமக்கள் வாக்குவங்கியை பொருத்தவரை இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகவே உள்ளது. 70% பொதுமக்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பணபுழக்கம் இன்மையால் ஆளும் கட்சிமீது அதிருப்தியை பதிவுசெய்கின்றனர். 

2001 தேர்தலில் டைடல் பார்க், சமத்துவபுரம், உழவர்சந்தை, மேம்பாலம், சிமென்ட்சாலை, மினிபேருந்து போன்ற எண்ணற்ற திட்டங்களை முன்னிருந்தியது திமுக. மீண்டும் கலைஞரின் பொற்கால ஆட்சி என்று முழங்கப்பட்டது. ஆனால் பணம்புழக்கம் இல்லை என்ற ஒற்றை சூழலில் திமுக படுதோழ்வி அடைந்தது. 

அதே நிலை தான் இந்த தேர்தலிலும். இலவசங்கள், நலதிட்டங்கள், ஊடக பிரச்சாரங்களை தாண்டி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தொழில் முடக்கம் என்ற காரணங்களில் திமுக சரிவை சந்திக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்போடு இந்த காரணிகளே கருத்தாய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தொலைகாட்சி மற்றும் கருத்துகணிப்பு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பை மே 10 தேதியே வெளியிட காத்திருக்கின்றன. ஆனாலும் அரசல்புரசலாக வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கசியதுவங்கியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை போலவே 90 தொகுதிகள் வரை மட்டுமே திமுக கூட்டணி கைபற்றும் என்றே வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளும் கூறுகின்றன.

அதிமுக கூட்டணி...... 144 - 184
திமுக கூட்டணி............. 50 - 90 

என்ற ரீதியிலேயே வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் உள்ளன.

Apr 12, 2011

இறுதிகட்ட தேர்தல் கருத்துகணிப்பு தமிழ்நாடு சட்டசபை 2011


தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே முடிவுகளை வெளியிட்டுள்ளன. 

ஏ.சி நில்சன் உட்பட தனியார் கருத்துகணிப்பு நிறுவனங்கள் பல அரசியல் கட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கு கருத்து கணிப்புகள் நடத்தி கொடுத்துள்ளன. லயோலா கல்லூரி உட்பட பல தனியார் கல்லூரிகளின் புள்ளியல் துறையும் கருத்துகணிப்புகள் நடத்தின.

பல்வேறு கருத்துகணிப்புகளின் அலசலோடு உளவுத்துறையின் இன்றைய புள்ளிவிபரங்களையும் சேர்த்து இறுதிகட்ட முடிவை எடுத்துள்ளோம்.

இன்று(12.4.2011) மாலை 6 மணி வரை நிலவிய அதே சூழல் நாளை மாலை 4 மணிவரை நிலவும்பட்சத்தில் இந்த கருத்துக்கணிப்பே இறுதியாக இருக்கும்.

விலைவாசி, மின்வெட்டு, எதிர்பார்த்தபடி பணத்தை இறக்காமை, கூட்டணியில் உட்கட்சி பிளவுகள் போன்றவையால் திமுக அணி தோழ்வியை நோக்கி நகர்கிறது. பரவலான கூட்டணி கட்சி பலம் இன்மை திமுகவுக்கு பெரிய பாதகமாக உள்ளது. சென்னை நீங்கலாக வடமாவட்டங்களில் மட்டுமே திமுக அணி கரைகாண்கிறது. மதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்தால் மட்டுமே திமுக கணிசமான தொகுதிகளில் வெல்லக்கூடும். 

மதிமுக வெளியேற்றம் ஒன்று மட்டுமே அதிமுகவுக்கு பாதகமாக அமைந்தது. மற்றபடி அதிமுகவுக்கு வெற்றி அருகிலேயே உள்ளது.

அதிமுக அணி: 
அதிமுக........... 129
தேமுதிக..........18
மா.கம்யூ...........10
இ.கம்யூ ............6
மமக...................2
கொ.இ.பே.......1
பு. தமிழகம் ....1
சமக ..................1
இதரம்.............. 2

மொத்தம் .....170

திமுக அணி :
திமுக........... 40
காங்கிரசு ....12
பாமக ............8
விசி................1
இதரம் ..........1

மொத்தம்......62

இதரம் ..........................2 

சுடாலின், அன்பழகன், பொங்கலூர் பழனிசாசி, பூங்கோதை உட்பட பல திமுக அமைச்சர்கள் தோழ்வியின் விளிம்பில் உள்ளதாக தெரிகிறது.

பேராசிரியர் க. அன்பழகன், பூங்கோதை ஆகியோரை தோற்கடிக்கவேண்டும் என்பது திமுகவின் மேல்மட்ட உத்தரவு என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

கோவை மாவட்ட 10 தொகுதிகள் கருத்துகணிப்பு

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகள் உள்ளன.

கட்சிகளின் வாக்குவங்கி, பொதுமக்கள் கருத்து, களஆய்வு ஆகியவை கணிப்பில் கொள்ளப்பட்டுள்ளது.

கோவை தெற்கு 
திமுக சார்பில் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக சார்பில் சேலங்சர் துரை ஆகியோர் போட்டியிடுகிறார்

காந்திபுரம் மேம்பாலம் கட்டுதல் தொடர்பாக மலையாள மக்கள் வாக்குவங்கியை இழப்பு, சிறுவர்கள் கொலை தொடர்பாக வடஇந்தியர்கள் வாக்குவங்கி இழப்பு, உட்கட்சி பூசல், மகன் பாரியின் வாரிசு அரசியல் என பொங்கலூர் பழனிசாமிக்கு அடுக்கடுக்கான எதிர்ப்புகள் உள்ளது. இதோடு கடுமையான மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்றவையும் எதிர்ப்பு அலையில் சேர்கிறது. இந்த எதிர்ப்பு அலைகளை சாதகமாக்கி வெற்றிக்கு முந்துகிறார் அதிமுக வேட்பாளர்.

அதிமுக 45%
திமுக 40%

கோவை வடக்கு
மின்வெட்டு, விலைவாசி இவற்றோடு, திமுக வேட்பாளர் வீரகோபலுக்கு உட்கட்சி பூசல் ஆழ குழிபறிக்கிறது. சிரிப்பு புண்ணகையுடன் எதார்த்த பழக்கத்தால் அதிமுக வேட்பாளர் மலரவன் வெற்றியை உறுதிசெய்கிறார்.

அதிமுக 48%
திமுக 38%


சிங்காநல்லூர்
பஞ்சாலைகள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுக்கள் தான் வெற்றி தோழ்வியை நிர்ணயிக்கின்றன. அதிமுக வேட்பாளர் சின்னராசு மீது கடும் அதிர்ப்தி நிலவுகிறது.

காங்கிரசு வாசன், பிரபு, தங்கபாலு என ஒட்டுமொத்த பிரிவும் சேர்ந்து போட்டி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. திமுகவினர் ஒத்துழைப்பும் இல்லை. மின்வெட்டு முக்கிய எதிரி. இதனால் உறுதியான தோழ்வியை அடைகிறார் காங்கிரசு வேட்பாளர் மயூரா செயக்குமார்.

அதிமுக 46%
காங்கிரசு 32%

கவுண்டம்பாளையம்
கூட்டணி பலம் இல்லாமல் தவிக்கிறது திமுக. இங்கு திமுக ஏரத்தாள தனிகட்சியாக தான் நிற்கிறது. பேருக்கு கூட காங்கிரசு கட்சியினர் இல்லை. பாமக,விசி சுத்தமாக இல்லை. கொமுக மட்டுமே அதிகபட்சம் 1200 ஓட்டுக்களை வைத்துள்ளது. இதனால் அதிமுக வேட்பாளர் கூட்டணி பலத்திலேயே வெற்றியை பறித்துவிடுகிறார்.

அதிமுக 50%
திமுக 38%

தொண்டாமுத்தூர்
தேமுதிக ஆதரவுடன் காங்கிரசு வேட்பாளர் கந்தசாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கிறர் அதிமுக வேட்பாளர் வேலுமணி.

அதிமுக 52%
காங்கிரசு 32%

கிணத்துக்கடவு
கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் மதிமுக, தேமுதிக ஆதரவுடன் திமுக வேட்பாளர் கண்ணப்பனை அதிமுக வேட்பாளர் தாமோதிரன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கலாம்

அதிமுக 44%
திமுக 42%

சூலூர்
இங்கும் கடும் போட்டி நிலவுகிறது. கொமுக வேட்பாளர் ஈசுவரன், தேமுதிக வேட்பாளர் தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். உள்ளூர்காரர், அனைத்து சாதியினர் வாக்கும் கிடைக்கும் என்பது தினகரனுக்கு கூடுதல் பலம். கொமுகவில் பிளவு, திமுக ஒத்துழையாமை, மின்வெட்டு காரணமாக விசைதறி பணிகள் முடக்கம் போன்றவை தேமுதிக பக்கம் வெற்றியை கொண்டுவருகிறது.

தேமுதிக 46%
கொமுக 40%


மேட்டுபாளையம்
தற்போதைய எம்.எல்.ஏவான அதிமுக வேட்பாளர் மீது அதிர்ப்த்தி அலை உள்ளது. ஆனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக ஆளும் கட்சி திமுக வேட்பாளர் அருண்குமார் அதே அளவு எதிர்ப்பு அலையில் சிக்கியுள்ளார். கூடவே திமுகவின் ராசா ஒரு குழுவினர் ஒத்துழைப்பு இல்லை. இதை சாதகமாக்கி கொண்டு கூட்டணி பலத்தில் வெற்றிக்கோட்டை கடக்கிறார் அதிமுக வேட்பாளர்

அதிமுக 45%
திமுக 41%


பொள்ளாச்சி
அதிமுக கோட்டையான இங்கு மீண்டும் அதிமுக வெற்றிகொடியே பறக்கிறது.

அதிமுக 50%
கொமுக 40%

வால்பாறை
கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் வெற்றியை கணிப்பது கடினமே. ஆனாலும் காங்கிரசு வேட்பாளர் கோவை தங்கத்திற்கு வால்பாறையில் 70% வாக்குகள் உள்ளது. அதே நேரத்தில் கிழ்பகுதியான ஆனைமலையில் கம்யூனிசுட்டு மற்றும் அதிமுக கொடி பறக்கிறது. 

இழுபறி

மொத்த தொகுதி 10
அதிமுக 8
தேமுதிக 1
காங் (அ) கம்யூ 1

Apr 9, 2011

விலைவாசி உயர்வு திமுக 0 அதிர்ச்சி சர்வே


விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு காரணமாக திமுகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்ற அதிர்ச்சி சர்வே திமுவை கலங்கவைத்துள்ளது.

பிரபலமான ஒரு தனியார் கருத்துகணிப்பு நிறுவனம் மூலம் விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு என்ற இரு காரணிகளை மட்டும் கொண்டு ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளனர் மாறன் தரப்பு. திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைப்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தைரியமாக தந்துள்ளது அந்த நிறுவனம்.

அதிமுகவாலேயே நம்ப முடியாத இந்த கருத்துகணிப்பை நம்பாமலும் இருக்க முடியவில்லை என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளது மாறன் தரப்பு.

திமுக தலைவர் கருணாநிதி, சுடாலின், அன்பழகன், ஆவுடையப்பன், நேரு, பூங்கோதை, என்ற நீண்ட திமுக நட்சத்திர படைகள். தங்கபாலு, வசந்தகுமார், யுவராசா, கோவை தங்கம், விடியல் சேகர் கொமுக ஈசுவரன் என்ற கூட்டணி நட்சத்திரங்கள். இவர்களின் வெற்றி வாய்ப்பும் உறுதியில்லை, இழுபறிதான் என்றுள்ளதாம் அந்த கருத்து கணிப்பு.

பெரிய சர்வெ நிர்வனம் என்பதால் வேறு வழிஇல்லாமல் ஒப்பந்த பணத்தை கொடுத்து சர்வே விபரங்களை வாங்கி பெட்டியில் பூட்டிவிட்டனர் மாறன் தரப்பு. 

தங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்கள் மூலம் கருத்துகணிப்பை நடத்தினர். நடுநிலையான தகவல்களை தரவேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதுமம் இருந்த செய்தியாளர்கள் தந்த புள்ளி விபரங்களும் அதிர்ச்சியையே தந்துள்ளது.

திமுக கூட்டணி 32 இடங்களை மட்டுமே வெற்றிபெரும் என்ற நிலையில் தான் உள்ளதாம் இதுவரை உள்ள தேர்தல் நிலவரம்.

Apr 2, 2011

தோல்வி பயம்: வேலூரில் கண்கலங்கிய கருணாநிதி


சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார்.

நான் முதலமைச்சர் தானா? தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தம்பிமார்கள் எவ்வளவு காலம் பொருத்துக்கொள்வார்கள்? கேரளாவில் மகாபலி மன்னன் போல என்னை துரத்த பார்க்கிறார்கள், பூணூல் கும்பல் என்து ஆட்சியை அகற்ற துடிக்கிறது. இப்படி எல்லாம் பேசிக்கொண்டு போன கருணாநிதி இறுதியில் எங்களை தோல்வியடைய செய்தாலும் உங்களை மறக்க மாட்டேன் என்று உருக தொடர்ங்கினார். பேச்சு குழைய சற்று கண்கலங்கி விட்டார். அப்படியே அமைதியாக பேச்சையும் முடித்துக்கொண்டார். 

வழக்கமாக 10 மணிக்கு மேலும் பேச்சை தொடரும் கருணாநிதி சேலம் கூட்டத்தில் 10 நிமிடம் முன்பே பேச்சை முடித்தார். இன்றைய வேலூர் கூட்டத்தில் 45 நிமிடம் முன்னரே பேச்சை முடித்துக்கொண்டார்.

வெளியான நான்கு கருத்துக்கணிப்புக்கே இப்படி தோல்வி பயம் தொற்றிக்கொண்டதே. இன்று வெளியாகும் அடுக்கடுக்கான கருத்துக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? அதை எல்லாம் விட மே 13 தோல்வியை எப்படி தாக்கிக்கொள்வார் தாத்தா?

Popular Posts