Showing posts with label கருத்துகணிப்பு. Show all posts
Showing posts with label கருத்துகணிப்பு. Show all posts

Feb 16, 2012

சுடாலின், விசயகாந்த், வைகோ ஓர் ஒப்பீடு



கருணாநிதிக்கு பின்னர் செயலலிதாவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அடுத்து முதல்வர் நாற்காலியில் அமரும் திறனும் யோகமும் யாருக்கு இருக்கிறது என்ற ஆய்வை சென்ற பதிவில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி தான் இந்த பதிவு


யோகம்(பாக்கியம்) என்று பார்த்தால் அது சுடாலின் மற்றும் விசயகாந்த் கதவை தான் தட்டுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த திறன் பெற்ற தகுதியானவர் யார் என்றால் பட்டென சொல்லிவிடலாம் வைகோ என்று. 

தமிழகம் ழுழுவதும் உள்ள மக்கள் மன ஓட்டமும் அப்படியே இருக்கிறது. 

எம்.எல்.ஏ., தேர்தலில் சுடாலினும் விசயகாந்தும் வெற்றிபெருவார்கள் வைகோ தோற்றுவிடுவார். அதே நேரத்தில் எம்.பி தேர்தலில் சுடாலினும் விசயகாந்தும் தோற்றுவிடுவார்கள் வைகோ வெற்றிபெற்றுவிடுவார். இதை அனைத்து அரசியல் நோக்கர்களும் சரிவைக்கிறார்கள்.

டெல்லியில் தமிழகத்துக்காக குரல்கொடுக்கும் கம்பீரம் வைகோவிடம் மட்டுமே உள்ளது. இந்த விசயத்தில் விசயகாந்த் 0 வாகவே உள்ளார். 

பிரதமரை நேரடியாக சந்திக்கும் திறனும், உடனே அனுமதி கிடைக்கும் கம்பீரமும் வைகோவிடம் மட்டுமே உள்ள என்பது ஊர் அறித்த விசயம்.

தமிழ்நாடு தோன்றி 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. இனி வரும் தலைமுறைக்கு கம்பீரமும் திறமையும் உள்ள முதல்வர் தான் தேவை என்பதில் இளம் தலைமுறை தெளிவாக உள்ளது.

இதன் அடிப்படையில் இளைஞர்கள் மத்தியில் எடுத்த ஆய்வு தான் அடுத்து நீங்கள் படிக்க இருப்பது. மறக்காமல் உங்கள் கருத்தையும் பதிவு செய்து செல்லுங்கள்

1. அரசியல் அனுபவம்

சுடாலின் ...........30%
விசயகாந்த் ......10%
வைகோ............ 60%

2. கல்வி அறிவு


சுடாலின்.......... 35%
விசயகாந்த்...... 05%
வைகோ........... 60%

3. அரசியல் அறிவு


சுடாலின் ................. 40%
விசயகாந்த் ............. 05%
வைகோ .................  55%


4. நிர்வாக திறன்


சுடாலின் ................. 45%
விசயகாந்த் ............. 10%
வைகோ .................  45%




5. மக்கள் தொடர்பு


சுடாலின் .............. 40%
விசயகாந்த் ...........15%
வைகோ ............... 45%


6. வெளியுலக தொடர்பு


சுடாலின் ................... 38%
விசயகாந்த் ............... 02%
வைகோ .................... 65%


7. சட்ட அறிவு


சுடாலின் ......................  24%
விசயகாந்த் ................... 01%
வைகோ ........................ 75%


8. தமிழகம் குறித்த அறிவு


சுடாலின்...............  25%
விசயகாந்த் ........... 05%
வைகோ ...............  70%


9 டெல்லி செல்வாக்கு


சுடாலின் .............. 20%
விசயகாந்த் .......... 01%
வைகோ ............... 74%


10 உலகளாவிய தமிழர் பார்வை


சுடாலின் ................. 15%
விசயகாந்த் .............. 01%
வைகோ ................... 86%


11. திராவிட கோட்பாடு


சுடாலின் ................. 25%
விசயகாந்த் ............. 10%
வைகோ .................. 65%


12. இறையாண்மை


சுடாலின் .................... 40%
விசயகாந்த் ................ 35%
வைகோ ..................... 25%


13. மேடை பேச்சு


சுடாலின் ............ 15%
விசயகாந்த் ........ 25%
வைகோ ............  60%


14. மக்கள் செல்வாக்கு


சுடாலின் ........... 35%
விசயகாந்த் ....... 45%
வைகோ............ 20%


15. கம்பீரம்


சுடாலின் .......... 30%
விசயகாந்த் .......15%
வைகோ............ 55%


16. சமையோசித புத்தி


சுடாலின்...............  30%
விசயகாந்த் ........... 10%
வைகோ................. 60%


17. ஆளுமை திறன்


சுடாலின் ............... 30%
விசயகாந்த் ........... 10%
வைகோ ................ 60%


18. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு


சுடாலின் ................ 30%
விசயகாந்த் ............ 10%
வைகோ ................. 60%


19.செயலலிதாவை எதிர்கொள்ளும் திறன்


சுடாலின் .............. 30%
விசயகாந்த்........... 30%
வைகோ............... 40%


20. கட்சி, கூட்டணி செல்வாக்கு


சுடாலின்................ 35%
விசயகாந்த்............ 35%
வைகோ ................ 30%


Feb 13, 2012

அடுத்த முதல்வர் யார்-கருத்துகணிப்பு முடிவுகள்


கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரும் திறனும், பாக்கியமும் உள்ள அடுத்த தலைவர் யார் என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டோம். 

தமிழகம் முழவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்கள் மூலம் பொதுமக்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.  பின்னர் அரசியல் நோக்கர்கள் உதவியுடன் புள்ளியல் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

சுடாலின், வாசன், இளங்கோவன், வைகோ, விசயகாந்த், ராமதாசு(அன்புமணி)
ஆகியோர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

அதிமுகவுக்கு இணையான கட்சி என்ற பலம் இருந்தாலும் திமுகவில உள்ள பிளவு சுடாலினுக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. கருணாநிதியை போல கூட்டணி அமைக்கும் சாதுர்த்தியமும், தமிழ் திரவிடம் என்று தூசுதட்டும் கலையும் வாய்க்கப்பெற்றால் மட்டுமே சுடாலினுக்கு முதல்வர் யோகம் இருக்கிறது.

மது, தெளிவில்லாத பேச்சு, கிணற்று தவளையாக இருத்தல் போன்றவை விசயகாந்தை பின்னுக்கு தள்ளுகிறது. பாமர மக்கள் வரை மாற்று தலைவராக பிரபலமாகி இருப்பது விசயகாந்துக்கு இரட்டிப்பு பலம். அதிமுகவின் வாக்குவங்கியை மட்டுமே தேமுதிக பிரித்தெடுத்துள்ளது. எனவே அதிமுக பலம்பெற்று இருக்கும் காலம் வரை விசயகாந்துக்கு முதல்வர் நாற்காலி இரண்டாம் இடம் தான். 

வடமாவட்டங்களில் மட்டும் கணிசமான வாக்குவங்கி உள்ளதால் ராமதாசுக்கும் வாய்ப்புகள் பின்னிடங்களிலேயே உள்ளன.

தெளிவான பேச்சு, ஆங்கில அறிவு, டெல்லி மட்டுமல்ல சர்வதேச தலைவர்களையும் சந்திக்கும் திறன், கரைபடியாத கை, போன்றவை வைகோவை ஒரு படி முன்னேற்றுகின்றன. ஆனால் பாமர மக்களிடம் வைகோ இன்னும் தெரியாத நபராகவே இருக்கிறார். பல கிரம மக்களுக்கு வைகோ யார் என்று தெரிவதில்லை. மதிமுகவின் சின்னமும் அவ்வளவு பிரபலமாகவில்லை. இதெல்லாம் வைகோவுக்கு பாதகமாக உள்ளன.

காங்கிரசு கரை கண்டால் மட்டுமே வாசன், இளங்கோவன் போன்றவர்களுக்கு சிறிய வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் தலைவர்கள் ஓட்டத்தில் வைகோவே முதலிடத்தில் உள்ளார். ஆனால் மதிமுக என்ற சிறிய ஓடம் திமுக, தேமுதிக என்ற விசைப்படகுகள் முன்னிலையில் தோற்றுப்போகிறது.

விசயகாந்த சுடாலின், வைகோ மூவருக்குமே சம வாய்ப்புகள் உள்ளது. இதில் முந்துவது யார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அடுத்த முதல்வர் யார்?

வைகோ............. 28%
சுடாலின்............ 27%
விசயகாந்த் ..... 26%
ராமதாசு ............ 10%
காங்கிரசு .........  9%

Apr 7, 2011

நக்கீரன் கருத்து கணிப்பு திமுக அதிர்ச்சி


விலைவாசி உயர்வு, மின்வெட்டு இந்த இரண்டு பிரச்சனைகள் தான் மக்களை சட்டென முடிவு எடுக்க வைக்கிறது. நலதிட்டங்களுக்கான டோக்கன், பணம், இவைகளை கடந்து விலைவாசி மற்றும் மின்வெட்டு திமுகவுக்கு எதிராக வாக்குகளை திருப்புகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் நேரடியாக கருத்துகணிப்பு நடத்தினோம். பல பத்திரிக்கை நிருபர்களின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்கள் கருத்துகணிப்பு ஆய்வாளர்களிடம் கொடுக்கப்பட்டு புள்ளியில் ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக...............142
தேமுதிக.............12
மா.கம்யூ.............10
இ. கம்யூ..............8
இதரம்..................6

மொத்தம்...................178

திமுக................32
காங்கிரசு.........10
பா.ம.க..............10
வி.சி..................1
கொமுக..........1

மொத்தம்........ 52

பாரதிய சனதா....1
இதரம் ....................1

இதுவரை வெளிவந்த கருத்துகணிப்புகளில் நக்கீரன் பத்தரிக்கையின் முதற்கட்ட கணிப்பு மட்டுமே திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற ரீதியில் அமைந்துள்ளது. நக்கிரன் பத்திரிக்கையின் இரண்டாம் கட்ட கருத்து கணிப்பும்  வெற்றியை அதிமுக பக்கத்துக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடதக்கது.

கடந்த நக்கீரன் இதழில் 117 தொகுதிகளில் திமுக கூட்டணி.69,  அதிமுக  கூட்டணி.48 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமநிலையில் இருந்த 20 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக சேர்க்கப்பட்டுள்ளது. 

திமுக.45, அதிமுக.38 தொகுதிகளில் வெற்றி பெரும் என நக்கீரன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. 

இதனால் நக்கீரன் கருத்துகணிப்பை கண்டு திமுகவினரே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

Mar 31, 2011

கருணாநிதி பக்கம் நகரும் கருத்துகணிப்புகள்


2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓரளவு வெற்றிவாய்ப்பு உள்ள அணி பக்கம் கருத்து திணிப்பை நடத்திவிடுவார்கள். கடந்த வாரம் வரை அதிமக அலை வீசியது. 140 தொகுதிகளுக்கு மேல் அதிமுக அணி கைபற்றும் என்று கருத்துகணிப்புகள் கூறி வந்தன. ஆனால் இந்த வாரம் திடீர் பல்டியாக கருத்து கணிப்புகளில் திமுக அலை வீசுகிறது. இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 2 தேதிக்கு மேல் திமுக அலை வீசும் என்று பாமக தலைவர் ராமதாசும், சுடாலினும் சொல்லி வந்தார்கள். அதேபோல காய் நகர்த்தப்பட்டுள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.

பணத்தை இறக்க தயக்கம் காட்டிவந்த திமுகவினர் இப்போது தைரியமாக பணத்தை வாரி இறைக்கின்றனர். 130 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்கிறது உளவுத்துறையின் சமீபத்திய கருத்து கணிப்பு.

பிரச்சாரம் மற்றும் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மிகமுக்கிய பணிகளை செய்வதில் அதிமுக அணி ஆமை வேகத்தில் தான் உள்ளது.

சன் தொலைகாட்சியை சமாளித்து வெற்றி அலையை மக்கள் மனதில் பதிய வைக்குமா அதிமுக ªன்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏப்ரல் 3 கருத்துக்கணிப்புகளை வெளியிட கடைசி நாள். அன்று ஏராளமான கருத்துக்கணிப்புகள் வெளிப்படையாக வெளியாக உள்ளன. அன்று 20 க்கும் மேற்பட்ட திமுக அணியின் கருத்து திணிப்புகள் வெளியாக உள்ளது. உண்மை நிலவரத்தை துள்ளியமாக அறிய இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழ்மலரும் இறுதி நிலவரம் அறிய முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளின் முழு நிலவரம் அ முதல் ன் வரையிலான புள்ளி விவரங்களுடன் விரைவில் வெளியிடப்படும். 

Mar 25, 2011

வெற்றியை தவறவிடும் செயலலிதா. மக்கள் மனநிலை


என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும் பிரச்சாரத்தில் மயங்கும் வெகுளித்தன வாக்காளர்கள் தான் வெற்றி தோழ்வியை நிர்னயிக்கின்றனர். திமுகவை விட அதிக பிரச்சாரக்காரணிகள் இருந்தும் பிரச்சாரபலம் அற்று நிற்கிறது அதிமுக அணி.

மின்வெட்டு உட்பட பிரச்சனைகளை தேர்தல் நேரத்தில் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பகல் நேரங்களில் 2,3 மணிநேர மின்வெட்டை மக்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக்கிவிட்டனர். அலைகற்றை ஊழல், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை கடந்து இலவசத்துக்கு மயங்கும் நிலையில் தான் வெகுசனங்கள் உள்ளனர். ஓரளவு படித்தவர்கள் மட்டுமே இந்த பிரச்சனைகளை சீர்தூக்கி பார்க்கின்றனர். இருந்தாலும் செயலலிதாவின் ஆணவப்போக்கு இன்னும் மாறவில்லை என்ற பிரச்சரத்தை சன், கலைஞர் உட்பட தொலைகாட்சிகள் இடைவிடாது செய்கின்றன.

பொதுவாக வெற்றிபெரும் அணிக்கு வாக்குசெலுத்தும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இந்த அணிதான் வெற்றிபெரும் என்ற ஒரு அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டால் போதும் வேறு பிரச்சாரங்கள் தேவை இல்லை. அதை சன் தொலைகாட்சி மட்டுமல்லாது அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆளும் கட்சி ஆதரவு ஊடகங்கள், உளவுதுறை என பலதும் கட்சிதமாக செய்கின்றன.

செய தொலைகாட்சி இன்னமும் சவ்வு இழுப்பு இழுத்துக்கொண்டிருக்கிறது. செயலலிதாவின் இலவச அறிவிப்புகள் இன்னும் பலரது காதுகளுக்கு செல்லவில்லை. கருணாநிதி மின்விசிறியும் சேர்த்து தருகிறாராம் என்ற எதிர்மறை பிரச்சாரம் தான் அதிமுகவுக்கு மிஞ்சுகிறது.

இப்போதைய நிலையில் தினமணி தினமலர் ஆனந்தவிகடன் செய்திதாள்கள் மட்டுமே அதிமுகவுக்கு உள்ள ஒரே பிரச்சர ஊடகம். விளம்பர மற்றும் பிரச்சார யுக்தி கொஞ்சம் கூட இல்லாத செயதொலைகாட்சியும் மக்களை வசீகரிக்க தவறிவருகிறது. 

15 நாட்களில் செயலலிதாவும் விசயகாந்தும் எவ்வளவு சூராவளி பிரச்சாரம் செய்தாலும் வெகுசனங்களுக்குள் ஒரு வெற்றி அலையை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

சன் தொலைகாட்சியின் பிரச்சார யுக்திக்கு முன்னால் அத்தனையும் அடிபட்டுபோய்விடும் என்று அடித்து சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தினத்தந்தி, தினகரன், நக்கீரன், சன், கலைஞர், இலவச திட்டங்களுக்கான டோக்கன் என திமுக அணிக்கு ஆதரவு அலை அதிகமாகவே வீசுகிறது.

எவ்வளவு பணம் இருந்தும் செயதொலைகாட்சியை சன்னுக்கு இணையாக வளர்க்காதது அதிமுகவுக்கு பெரும் வீழ்ச்சியே.

இன்றைய நிலையில் மக்கள் மனங்களில் மீன்டும் கருணாநிதி என்ற அலுப்பு அலையே வீசுகிறது. 

Mar 17, 2011

மூன்றாம் அணி வெற்றிவாய்ப்பு? -கருத்துகணிப்பு


அதிமுக கூட்டணி உடைந்து மூன்றாம் அணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு குறித்து திமுக சார்பில் உளவுத்துறையின் மின்னல்வேக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தேமுதிக, இடதுசாரிகள், மதிமுக உட்பட கட்சிகள் வாக்குவங்கி மற்றும் நடுநிலை வாக்காளர்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுக 85
திமுக 72
தேமுதிக 16
பாமக 12
கம்யூ 12
காங்கிரசு 10
மதிமுக 10
வி.சி 2
கொமுக 2
இதரம் 13

அதிமுக அணி ..............90
திமுக அணி ..................102
மூன்றாம் அணி........... 42

இந்த கருத்துகணிப்பு படி மூன்றாம் அணி தயவு இல்லாமல் அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்பதை காட்டுகிறது. இதற்கிடையில் மூன்றாம் அணி அமைவதை தடுக்கும் தடுக்கும் முயற்சியில் அதிமுகவினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

குறைந்த பட்சம் வைகோ தலைமையில் சிறு கட்சிகள் மூன்றாம் அணியாக செயல்பட வாய்ப்புள்ளது. 

Feb 10, 2011

அடுத்த முதல்வர் யார் கருத்துகணிப்பு முடிவுகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

10.02.2011 வரை எடுக்கப்பட்ட முடிவுகள்.

1. செயலலிதா...........53 %
2. கருணாநிதி............28 %
3. சுடாலின்.................15 %    
( தி.மு.க - 43 )
4. விசயகாந்த்.............3 %
5. காங்கிரசார்.............1 %

Popular Posts