Showing posts with label கோவை வலைபதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label கோவை வலைபதிவர் சந்திப்பு. Show all posts

Jun 12, 2012

மரம் ‘வெட்டியான’ கோவை வலைபதிவர் சந்திப்பு

முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. 

வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்டியாக அரட்டை அடிக்கும் கூட்டமாக மட்டும் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வலைப்பதிவர் குழுமம் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட வேண்டும். அதற்கான அத்தனை தகுதிகளும் கோவை வலைப்பதிவர்களுக்கு இருக்கிறது. இங்கு பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கணிபொறியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள், வங்கியாளர்கள், தொழில்முனைவோர், அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் பதிவர்களாக உள்ளனர்.  

இவர்களை முறையாக இணைத்து, நிச்சயம் ஒரு மாற்று ஊடகமாக  கோவை வலைப்பதிவர் குழுமம் செயல்பட முடியும்.

ஒரு குழுமம் என்றால் முதலில் திட்டமிடுதல் வேண்டும். ஆனால் திட்டமிடுதலுக்கு முன்னர் சந்திப்பை முதன்மைப்படுத்தி இருக்க கூடாது. இருந்தாலும் சங்கவி மற்றும் சக பதிவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கோவை மண்ணின் வலைப்பதிவர் என்ற முறையில் எனது சில ஆலோசனைகளை இங்கு பகிர்கிறேன். ஏற்பதும் விலக்குவதும் பெரும்பாண்மை பதிவர்களின் விருப்பம்.

1. முதலில் கோவை வலைப்பதிவர் குழுமத்தின் வலைதளத்தை முறையாக பாராமறியுங்கள். ஏனெனில் அது தான் நமது தலைமை அலுவலகம்.

2. குழுவின் செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்து அரசாங்கத்தில் பதிவு செய்யுங்கள். (பதிவு செய்யாமல் செயல்படுவதும் கூடுவதும் சட்ட விரோதம்) பதிவு செய்வதால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும்.

3. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை நல்குங்கள் (மின்னனு மூலமாகவும் செய்யலாம்)

4. ஒட்டல் எடுத்து விவாதிப்பது எல்லாம் வீண். வலைப்பதிவிலோ, முகநூல் வாயிலாகவோ அனைத்து உறுப்பினரின் கருத்துக்களை கேட்டறியுங்கள். ( மாதம் ஒரு முறை இணையத்திலேயே தாராளம் விவாதிக்கலாம்)

5. குழுமத்திற்கான கொள்கை, செயல்திட்டங்கள், விதிமுறைகளை வகுத்து செயல்படுத்துங்கள்.

6. உறுப்பினர்களின் முழு விபரங்களையும் சேகரித்து பதிவு செய்யுங்கள்.

7. குழுமத்திற்கான செயல்பாட்டு நிதி ஆதாரத்திற்கான வழிமுறைகளை கண்டறியுங்கள்.

8. ஒரு சங்கம் எப்படி செயல்படவேண்டும் என விதிமுறைகள் இருக்கிறதோ அதை முழுமையாக பின்பற்றுங்கள்.

9. சேவை எல்லாம் அப்புறம் முதலில் நமது தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

10. ஆண்டுக்கு ஒரு முறை சரியாக திட்டமிட்டு ஆண்டுவிழா கொண்டாடுங்கள். இது தனிபட்ட வலைப்பதிவர் சந்திப்பாக மட்டும் இல்லாமல் குடும்பம் குழந்தைகளோடு கொண்டாடும் ஒரு திருவிழாவாக திட்டமிடப்படட்டும். 

இதுபோன்று ஒவ்வொருவருக்கும் பல கருத்துக்கள் இருக்கும் அவற்றை கேட்டறிய முதல்கட்டமாக கோவை வலைபதிவர் குழும தளத்தில் ஒரு விவாதம் வைக்கவும். 

நன்றி.

Jun 11, 2012

கோவை வலைபதிவர் சில சுவாரசியங்கள்


எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர நிழ்வுடன் துவங்கியது கோவை வலைப்பதிவர் குழுமம். எப்படா முடியும் என்று மனதுக்குள் அளுத்துக்கொண்டேன். ஆனால் புரியாமல் 1.30 மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்துக்கு உலக சினிமா ரசிகன் தந்த 2 நிமிட விளக்கம் மிக அருமை. இப்போது மீண்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.  

மரம் வளர்ப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு உதவுதல் இந்த மூன்றும் தான் எந்த சந்திப்பிலும் விவாத பொருள். ஆனால் என்னை பொருத்தவரை இது அளுத்துபோய் விட்டது. கோவை சந்திப்பிலும் அதுதான் பேசப்பட்டது. 

இரண்டாவதாக மைக் பிடித்த பேராசிரியர் திரு. பழனி கந்தசாமி அவர்கள் ரத்தின சுருக்கமாக தன் கருத்தை முன்வைத்தார். பதிவர்கள் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாது. பதிவு, இணையம் மூலமாக இயன்றதை செய்யலாம் என்றார். 

மீண்டும் மரம் வளர்ப்பு பாதுகாப்பு விவாதங்கள் தொடர்ந்தது. வின்செண்ட் ஐயா என் பக்கத்து தோட்டக்காரர் என்பது அப்போது தான் தெரிந்தது. இணையத்தில் 4 ஆண்டுகள் பின்னூட்டம் ஏழுதி பரசுபரம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். ஆனால் நேரில் சந்தித்தித்த இப்போது தான் இந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது. 

சரியாக பெயர் தெரியவில்லை (மன்னிக்கவும்) முகநூல் தோழி ஒருவர் முகநூல் பயன்பாட்டில் பெண்களின் தயக்கத்தையும் பிரச்சனைகளையும் தெளிவாக பகிர்ந்து கொண்டார். பாராட்டுக்கள்.  அடுத்து கோவை மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் அறிமுகம் கிடைத்து. 

அடுத்து பேசிய தோழியின் கருத்து எனக்குள் புது கருத்து தெளிவை தந்தது. தோழி அகிலா என்று நினைக்கிறேன். மாதம் ஒருமுறை பெரியார் பற்றி பதிவு எழுதுவேன். காரணம் அவர் இல்லாவிட்டால் இன்று இந்த அளவுக்கு நாம் சமுய ரீதியில் முன்னேறி இருப்போமா என்று தெரியாது.
கடவுள் மறுப்பு என்ற ஒற்றை வரியில் மட்டுமே பெரியார் அவர்களை பார்க்கக்கூடாது. கடவுள் மறுப்பை தாண்டி சமுதாய சீர்திருத்தத்திற்காக பெரியார் செய்த பணிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாமல் போவது வேதனை என்பதை பகிர்ந்துகொண்டார். ( பெயர் சரியாக தெரியவில்லை அகிலா என்றே நினைக்கிறேன்) பெரியார் அவர்ளை எனக்குள் மிகச்சரியாக புரிய வைத்த தோழி அகிலா அவர்களுக்கு மீண்டும் ஒரு தலைவணக்கம்

அடுத்து பேசிய தோழி கோவை மு சரளா அவர்கள் அன்பை பற்றி பேசினார். மரங்களை பற்றி பேசாமல் மனிதர்களின் அன்பை பற்றி பேசியதற்கு பாராட்டுக்கள். அவரின் வலைப்பதிவு கவிதைகளிலும் அன்பு கொட்டிக்கிடக்கிறது. அடுத்து முக்கிய நபரான சங்கவி எந்த முக்கிய கருத்தையும் சொல்லவில்லை. மாற்றாக ஒவ்வவொரு பதிவரின் சிறப்பை அவ்வப்போது அறிமுகப்படுத்தினார். நன்று.

முகநூல் மூலம் மனிதர்களை பாதுகாக்கும் அரும்பணி செய்யும் ஒரு அன்பரின் பணி உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது. அவரது பணிகளை பற்றி தனிப்பதிவாக எழுத திட்டமிட்டுள்ளேன். அடுத்து மீண்டும் சில நண்பர்கள் மரங்கள் பாதுகாப்பு பற்றி பேசினார்கள். 

அடுத்து பின் வரிசையில் அமர்ந்திருந்த என் பக்கம் மைக் வந்ததும் முக்கிய அறிவிப்பு வந்தது. மசுகட்டில் இருந்து நண்பர் மனசாட்சி மைக்கை பிடிங்கிக்கொண்டார். கோவை வலைப்பதிவர் சந்திப்பு தித்திப்பாக செல்பேசி வழி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நன்றிகள் பல.

நான் என்ன பேசியிருப்பேன் என்று எனது வலைதளத்தை தொடர்ந்து படிப்பவர்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

வேரென்ன? விதண்டாவாதம் தான்.

சாலை ஒர மரங்களையம், சிட்டுக்குருவிகளையும் பாதுகாப்பதாக கூறுபவர்கள் மீது கோபத்தை பகிர்ந்துகொண்டேன். நகரத்தில் உள்ள மரத்துக்காக போராடும் இவர்கள் வனத்திலும் கிராமங்களிலும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட முக்கிய காரணமாகின்றனர். சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. அதே போல செல்போன் டவர் தவிர்க்க முடியாதது. சிட்டுக்குருவிக்காக உச்சு கொட்டுகிறவர்கள் தயவு செய்து தங்கள் செல்போன்களை தூக்கி எறியுங்கள் என்றேன். யாரும் தயாரில்லை. 

(செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது ஒரு கட்டுக்கதை. செல்போன் நிறுவனங்களிடம் பேரம்பேசி பணம்பறிப்பதற்காக எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்பதை புறிந்து கொள்ளுங்கள்.)

விரிவாக்கப்பணிகள் நடக்கும் சாலையில் வெட்டப்படும் 150 மரங்களுக்காக கண்ணீர் வடிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு வனத்தில் அதிகாரப்பூர்வமாக வெட்டப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் தெரியாதது வேடிக்கை.

சாலை ஓரங்களில் வெட்டப்படவேண்டிய மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும். அதை தடுக்க தயவு செய்து யாரும் நேரம் ஒதுக்க வேண்டாம். உங்களால் அது இயலாது.  

அடுத்து மரக்கன்றுகளை தயவு செய்து விவசாயிகளுக்கு கொடுங்கள். சாலை ஓரத்தில் நட்டி வீணடிக்காதீர்கள். சாலை ஓரத்தில் மரத்தை நட்டினால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் பொருப்பு இருக்கிறது. அது உங்களால் முடியுமா? 

வலைப்பதிவர்கள் நாம் பொருளாதார ரீதியாக யாருக்கும் உதவி செய்ய முடியாது. அதே போல மரங்களை நடவோ, பாதுகாக்கவோ நிச்சயமாக முடியாது. அதனால் இதுபோன்ற சேவைகளில் எனக்கு உடன்பாடில்லை. 

வலைப்பதிவு, இணையம் மூலமாக என்ன உதவிகள் செய்ய முடியுமோ அவைகளை வலைப்பதிவர்களால் நிச்சயமாக செய்ய முடியும். எனது கருத்தாக மலைகிராமத்தில் உள்ள 8,&10, 12ம் வகுப்பு மாணவ&மாணவியருக்கு இணையம், வலைப்பதிவு குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தி தருவோம். அவர்களின் படைப்புகளை வலைப்பதிவுக்கு கொண்டு வருவோம் என்றுள்ளேன். அதற்கான அரசாங்க அனுமதியும் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளேன்.

விவசாயத்தை அரசாங்க பணியாக அறிவிக்க கோரி சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேம். அதற்கான ஆதரவை தரும்படி கேட்டுக்கொண்டேன்.

இறுதியில் பல நண்பர்களும் வந்தார்கள். குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நேரம் 6.30 கடந்துவிட்டது. இதற்கு மேலும் நான் வீட்டுக்கு புறப்படாவிட்டால் காட்டுயானைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் புறப்பட்டு விட்டேன். 

அனைவரையும் எங்க ஊரு அட்டப்பாடிக்கு சுற்றுலா வர அழைப்பு விடுத்துள்ளேன். வருக வருக....

மீதி அடுத்த பதிவில்... 

Popular Posts