Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Nov 24, 2010

அ.தி.மு.க - விசயகாந்த் கூட்டணி உறுதியானது

இன்று நடக்க உள்ள போக்குவரத்து தொழில்சங்க பொதுதேர்தலில் அதிமுக தொழில்சங்கத்துக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகளுக்கு விசயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் வாயிலாக, இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உறுதியாகி இருந்தது. ஆனால் அதை இரு கட்சி தலைமையிடமும் தேவைப்படும் நேரத்தில் வெளியிட்டால் போதும், இப்போது இதுகுறித்து எதுவும் பேசவேண்டாம் என்ற ஒப்பந்தம் செய்திருந்தன.

 காங்கிரசு மற்றும் மதிமுக இதர கட்சிகளின் நிலைபாடுகளுக்கு பின்னர் தே.மு.தி.க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

வரும் சனவரி மாதம் சேலத்தில் தே.மு.தி.க மாநிலமாநாடு நடக்க இருக்கிறது. அன்று முறைபடி அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து விசயகாந்த் அறிவிக்க உள்ளார். அதை தொடர்ந்து செயலலிதாவும் கூட்டணிக்கு விசகாந்துக்கு வரவேற்பு அறிக்கை வெளியிடுவது என பேசிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கம் போக்குவரத்து தொழில்சங்க தேர்தலால் கூட்டணியில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அ.தி.மு.கவுக்கு விசயகாந்த ஆதரவு தெரிவித்துள்ளார்.

Nov 21, 2010

பத்திரிக்கை செய்திகளின் உண்மை தன்மை: கருத்து கணிப்பு

பத்திரிக்கைளில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பது குறித்த இந்த கருத்து கணிப்பில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்

இணைய வாசகர்கள், தமிழ்மலர் செய்திதாள் வாசகர்கள், இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களின் நேரடி அலசல், துறைசார் அறிஞர்களின் கருத்து இவற்றை தொகுத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ்மலர் செய்திதாளில் வெளிவர இருக்கும் சிவப்பு இதழியல் (Red Journalism) என்ற கட்டுரை தொடரில் வாசகர்களின் சிறந்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
நன்றி...

Popular Posts