Mar 18, 2011

தில்லாலங்கடி வேலையை துவங்கிய சன்டிவி


தேர்தல் களத்தில் எதிரணியின் பலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் யுக்தியை சன்தொலைகாட்சி மூலம் திமுக பெற்றுவருகிறது. நடுநிலை ஊடகம் போல காட்டிக்கொள்ளும் சன்குழுமம் வாக்குபதிவுக்கு முன்னரான மூன்றுநாட்களில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்திவிடும்.

விளம்பரம் பெருவதற்காக அனைத்து கட்சிகளின் செய்திகளையும் வெளியிடுவார்கள். இறுதி கட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு காரியத்தை சாதித்துக்கொள்வார்கள்.

நேற்று அதிமுக அணியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சன்குழுமம் காசுக்கு மீறி கத்திவிட்டது. செயலலிதாவை யாரோ ஒருவர் ஆட்டிவைக்கிறார் என்றார் மதிமுகவின் நாஞ்சில் சம்பத். ஆனால் ராசபட்சே பேச்சை கேட்டு செயலலிதா செயல்படுகிறார் என்று நாஞ்சில் சம்பத் கூறியதாக தொடர்ந்து செய்தி வெளியிட்டது சன் டிவி. தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை நடந்து கொண்டிருக்க தேமுதிக செயலலிதாவுக்கு 3 நிபர்ந்தனைகள் விதித்துள்ளதாக செய்தி பரப்பினர். அதே போல அதிமுகவுடன் சமரசம் இல்லை என தா.பாண்டியன் பேட்டியளித்ததாக பரப்பினர். இந்த செய்திகள் நாஞ்சில் சம்பத், விசயகாந்த், த.பாண்டியன் உள்ளிட்டோரை அதிர்ச்சியடைய வைத்தது. சூழ்நிலை கைதியானதால் மறுப்பு செய்தி வெளியிட முடியாமல் தவித்தனர். 

அதிமுக கூட்டணியை உடைப்பதில் தீவிரம் காட்டிய சன்குழுமம் அதிமுகவில் உள்ள சிலரின் உதவியை நன்கு பயன்படுத்தி வருகிறது. 

அரசியலில் எதிரிகள் என்றாலும் சாராய தயாரிப்பு தொழிலில் கூட்டாளிகளாக உள்ளனர் துணை ஒன்றாம் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமையின் தோழி ஆகியோர். இவர்கள் இணைந்து போட்ட ரகசிய திட்டம் தான் அதிமுக கூட்டணியில் நேற்று நிலவிய அத்தனை குழப்பங்களுக்கும் காரணமாம்.( இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் நாளை காலை பதிவிடுகிறேன். )

மதிமுகவுக்கு 15 தொகுதிகள் கொடுத்து பிரச்சனையை சுமூகமாக்க செயலலிதா தீவிரம் காட்டியுள்ளதாக அதிமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. நீங்கள் சொன்ன மாதிரி மேல் மட்ட ரீதியில் உள்ள இந்த சாராய கூட்டணி பற்றி ஒருவர் கூட வாய் திறப்பது இல்லை. சன் கூவுவது ஒரு வகையில் நல்லது தான். திருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ள எதிரிகள் ஒன்று சேர உதவும்.

    ReplyDelete

Popular Posts