தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் சூடு இன்னும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. சக பத்திரிக்கை நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் திமுகவுக்கு ஆதரவான ஒரு கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழகம் முழுவதும் தனியார் உளவுபிரிவின் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை திமுக கோரியுள்ளது. பிப்ரவரி 26 தேதி இந்த கணிப்பு திமுக தலைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் வெற்றிகளை பெற முடியும் என்ற பொதுவான கருத்து வலியுறத்தப்பட்டுள்ளது.
80 முதல் 110 தொகுதிகள் வரை திமுககூட்டணிக்கு உறுதியான வெற்றிவாய்ப்பு உள்ளது. கொங்கு மண்டலத்தில் கொமுக கூட்டணியுடன் 20 தொகுதிகளும், வடமாவட்டங்களில் பாமக, விடுதலைசிறுத்தைகள் மூலம் 50 தொகுதிகள் வரையும், தென் மாவட்டங்களில் சமக(சரத்குமார்), காங்கிரசு கூட்டணியுடன் 30, கடலோர மாவட்டங்களில் சிறுபான்மையினர் வாக்குவங்கியை தக்கவைப்பதன் மூலம் 10 தொகுதிகள் வரை வெற்றிவாய்ப்பு உள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரசை கூட்டணியை விட்டு விலக்குவதால் வெற்றி வாய்ப்பு குறையாது என்பதும் கூடுதல் தகவல்.
திமுக கூட்டணி .................120 - 130
அதிமுக கூட்டணி .............114 - 124
வெற்றிவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் கொங்குநாடு கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர சிக்கல் உள்ளது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் 58 தொகுதிகளில் கொமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசு நிராகரித்துவிட்டதால் கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தங்களுக்கு தனியாக 6 தொகுதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது கொமுகவின் கோரிக்கை. 6 தொகுதிகள் ஒதுக்குகிறோம் ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்பது திமுகவின் கோரிக்கை.
இந்நிலையில் கேட்கும் 4 தொகுதிகள் கொடுத்து அதிமுக கூட்டணியில் கொமுகவை இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
கொமுக, தேமுதிக போன்றவைகளைப் பார்த்து வைகோ நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
ReplyDelete