இலங்கை அரசை கண்டித்து காங்கிரசு இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறதாம். இதை தமிழக மீனவர்களும், இன்னபிற தமிழர்களும் நம்ப வேண்டுமாம்.
இவர்கள் உட்கட்சி சண்டையை அடக்க இவர்களுக்கு வேறுவழியே இல்லையா? தினம் தினம் செத்துமடியும் தமிழக மீனவர்கள் அவலத்திலா இப்படி ஆதாயம் தேடுவது?
கடந்த சில நாட்களாக தங்கபாலுவுக்கு எதிராக காங்கிராசாரின் போராட்டம் வலுத்துள்ளது. நேற்று தமிழகத்தின் பல இடங்களில் தங்கபாலு உருவபொம்பையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில் இருந்து தப்பிக்க தங்கபாலு போட்ட படு மட்டமான திட்டம் தான் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தமிழர்களை இவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறானுகளே இந்த சோனியா தாசன்கள்...
2 மாதத்திற்கு முன்னாடி கனிமொழியின் கைது தோசம் நீங்க திமுக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதே பாணியில் இப்ப தங்கபாலு. இப்படிபட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகளை கொண்டுள்ளது தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு. அதை தவிர வேறு என்ன சொல்ல...
மவனே மைலாப்பூர்ல டெபாசிட் இழக்க போறான்
ReplyDelete