Showing posts with label மின்வெட்டு. Show all posts
Showing posts with label மின்வெட்டு. Show all posts

Mar 30, 2011

கிரிக்கெட் பார்க்க முடியாததால் சாலைமறியல்


இந்தியா பாகிசுத்தான் இடையேயான உலககோப்பை அரையிறுதி போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியை பார்க்க பலரும் இன்று விடுமுறை எடுத்துக்கொண்டு தொலைகாட்சி முன் அமர்ந்திருந்தனர். ஆனால் வழக்கம் போல 2-4, 4-6, மின்வெட்டு கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

ஈரோடு, சேலம், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். முக்கியமான போட்டி நடக்கும்போது கூட மின்வெட்டு செய்யவேண்டுமா என்று கோசங்களை எழுப்பினர். 

கோவையில் முன்னாள் முதல்வராக பதவி இறக்கம் ஆக உள்ள கருணாநிதி வந்துள்ளதால் இன்று மட்டும் மின்வெட்டு இல்லை. கோவை மக்கள் நாங்க கொடுத்துவச்சவங்க போங்க...

Popular Posts