Showing posts with label பாமக கூட்டணி. Show all posts
Showing posts with label பாமக கூட்டணி. Show all posts

Feb 18, 2011

தி.மு.க,பா.ம.க கூட்டணி 31 தொகுதி ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளதாக கருணாநிதி மீண்டும் அறிவித்துள்ளார். இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் பாமக தலைவர் அன்புமனி ராமதாசு கருணாநிதியை சந்தித்து பேசினார்.

 பின்னர் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் அன்புமணி ராமதாசு சோனியாவை சந்தித்து கூட்டணியில் சேர அனுமதி வாங்கிவந்தார். காங்கிரசு தலைமையிலான கூட்டணியில் திமுக, பா.ம.க, விடுதலைசிறுத்தைகள் உட்பட கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Posts