Showing posts with label நிருபர்கள். Show all posts
Showing posts with label நிருபர்கள். Show all posts

Nov 7, 2010

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம்

லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் அந்த வட்டாட்சியர்.

தீபாவளிக்கு அந்த அதிகாரியை கோவை நிருபர் பட்டாளம் சந்தித்தது.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்ததாக எண்ணிய வட்டாச்சியருக்கு அதிர்ச்சி.

‘‘இதற்கு முன்பு இருந்த வட்டாச்சியர்கள் தீபாவளி தோறும் நிருபர்களுக்கு அன்பளிப்பாக போனஸ் தொகை தருவார்கள். அதுபோல நீங்களும் ஏற்பாடு செய்யுங்கள் என்றுள்ளனர்.’’

அது என்ன நிருபர் போனஸ் தொகை என்று அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்து விட்டார் தாசில்தார்.

நிருபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.1000 கவரில் வைத்து கொடுக்கவேண்டும். 150 நிருபர்கள் உள்ளார்கள், நிருபர்களுக்காகவே பொதுமக்களிடம் ஆண்டுதோறும் தீபாவளி வசூல் (லஞ்சம்) வாங்குவோம். என்றுள்ளனர் ஊழியர்கள்.

அதிர்ச்சியடைந்த தாசில்தார் சில நிருபர்களை அழைத்து தனக்கு சம்பளம் 20 ஆயிரத்துக்கும் குறைவுதான். பணியில் வேலைக்கு சேர்ந்து 34 வருடங்கள் ஆகிறது. இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. என்னால் தீபாவளிக்கு வாழ்த்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதாவது கையெழுத்து போன்ற உதவிகள் இருந்தால் வாருங்கள் செய்து தருகிறேன் என்றுள்ளார்.

நீங்கள் ரொம்ப யோக்கியமான அதிகாரி என்பது எங்களுக்கு தெரியும். தாசில்தார் அலுவலகத்துக்குள் இருக்கும் கடைகளில் இருந்து உங்களுக்கு எவ்வளவு பங்கு வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும். தீபாவளிக்கு பின்னர் பத்திரிக்கையில் செய்தியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து வேறு சில பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனது உயர் அதிகாரிகளிடமும் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து வந்த பதில் தான் அதை விட அதிர்ச்சி

பத்திரிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கவர் போகும்போது உங்களுக்கு கொடுக்க என்ன தயக்கம். உடனடியாக ஏற்பாடு செய்து பத்திரிக்கையாளர்களுக்கு கவரை கொடுங்கள் என்றுள்ளனர்.

34 ஆண்டுகளாக என் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரையும் சமாளித்து, லஞ்சம் வாங்காமல் இருந்து விட்டேன். இந்த பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது?

நீண்ட யோசனைக்கு பின்னர் முடிவெடுத்தார் தாசில்தார்.

தனது ஊழியர்களை அழைத்து வண்டியை எடுங்கள் இன்ஸ்பெக்சன் போகவேண்டும். அப்படியே மொய் கவரையும் ரெடி பண்ணுங்கள் என்றார்.

நிருபர்களுக்கு ரூ.500 கவரில் கொடுக்கப்பட்டது.

....................................

இது ஒரு அதிகாரியின் நிலையல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதே நிலை தான்.

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

லஞ்சத்தை நிச்சயம் ஒழிக்க முடியாது.

Popular Posts