Showing posts with label தமிழர் அமைப்புகள். Show all posts
Showing posts with label தமிழர் அமைப்புகள். Show all posts

Feb 1, 2011

கலவரத்தை தூண்ட கோடு போடும் தினமலர்


மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. 

காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ் மக்களுக்கு குடிநீர் எடுக்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதை தமிழக விவசாயிகள் சொன்னதாக தினமலர் உலகமகா பொய்யை சொல்லியிருந்தது.

குடிக்க தண்ணீர் எடுப்பதை தவறு என்று எந்த காலத்திலும் தமிழன் சொல்லமாட்டான். அப்படி இருந்தும் தினமலர் தொடர்ந்து தமிழர் கருத்தாக தன்சொந்த கருத்தை திணித்து வருகிறது. 

தினமலரின் இந்த படுபாதக செயலை தெருநாய் தொல்லை என்று தமிழக விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மூக்கு உடைந்துபோன தினமலர் இன்று தமிழ் அமைப்புகளையும் விவசாய அமைப்புகளையும் சிண்டு முடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. 

மேட்டூர் அணையில் கர்நாடகா ரோடுபோடுவதை கண்டு தமிழர் அமைப்புகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனவாம். விவசாயிகள் கொந்தளிக்கவில்லையாம். 

விவசாயிகளும் தமிழர் அமைப்புகள் மட்டும் தான் காவேரிக்காக போராட வேண்டுமா? ஏன் தினமலர் ஆசிரியர் குடும்பம் காவேரி கரையில் உண்ணாவிரம் இருக்க வேண்டியது தானே.

Popular Posts