Showing posts with label சி.பி.ஐ விசாரனை. Show all posts
Showing posts with label சி.பி.ஐ விசாரனை. Show all posts

Feb 14, 2011

வாய் திறந்தார் ராசா - என்னை வைத்து அரசியல் நடக்கிறது


இன்று மீண்டும் ராசாவுக்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ காவல் நீட்டிக்கப்பட்டது. என்னை வைத்து அரசியல் செய்கிறார்கள் என ராசா பகிரங்கமாகவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

பிப்.2 தேதி கைது செய்யப்பட்ட ராசா தொடர்து 11 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று ராசாவுக்கு மேலும் 3 நாட்கள் காவல்நீட்டிப்பு செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராசாவின் வழக்கறிஞர் , அந்த வழக்கு அரசியல் நோக்கில் கொண்டு செல்லப்படுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. ராசானை உடணடியாக பிணையத்தில் விடுதலை செய்யவேண்டும் எனவாதிட்டார். 

சி.பி.ஐ தரப்பில் மேலும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தவேண்டி உள்ளதால் இப்போதைக்கு ராசாவை வெளியில் விடக்கூடாது, மேலும் 4நாட்கள் விசாரணை காவல் வேண்டும் என வாதிட்டனர். 

சி.பி.ஐ காங்கிரசு கைபாவையாக செயல்படுத்துகிறது என்பது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில் ராசாவை வைத்து தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி என்ற பேரத்தில் காங்கிரசு ஈடுபட்டுள்ளது தி.மு.கவுக்கு பெரும் அதிர்ச்சி.

விரைவில் தலைவர் மௌனம் கலைவார். பொருத்திருந்து பொருத்திருந்து பொங்கி வெடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ராசாவின் ஆதரவாளர்கள்.

Nov 12, 2010

கோவை என்கவுன்டர்: நீதிமன்றம் கேள்வி, போலீசார் திணரல்

 கோவையில் இரு குழந்தைகளை கடத்தி கொன்ற வழக்கில், போலீசு விசாரனையின் போது மோகனகிருசுணன் என்ற முக்கிய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டான்.

  இந்த என்கவுன்டரை ஆய்வாளர் அண்ணாதுரையின் கீழ் 2 துணை ஆய்வாளர்கள் படை செய்தது.

 விசாரனை கைதி போலீசு வேனில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்ககளை பெரும் அதிர்ச்சி அடையவைத்திருக்கிறது.

 இதற்கிடையே 2ம் விசாரனைகைதியான மனோகரனை நேற்று நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அப்போது ஆய்வாளர் கனகசபாபதி நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்த உறுதிமொழி அளித்தார்.

ஆய்வாளர் அண்ணாதுரையால் முக்கிய விசாரனை கைதி மோகனகிருசுணன் என்கவுன்டர் செய்யப்பட்ட விபரங்களை நீதிபதியிடம் கூறினார்.

 நீதிபதி கோபிநாத் ஆய்வாளர் கனகசபாபதியிடம், ‘‘நீதிமன்ற காவலில் இருந்து புலன் விசாரணைக்காக போலீசு காவலில் எடுத்து சென்ற 1 வது எதிரியிடம் விசாரணை நடத்த ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தாரா?’’ என்று கேட்டார்.  

 இதற்கு ‘‘அனுமதி பெறவில்லை’’ என ஆய்வாள் கனகசபாபதி பதில் அளித்தார்.

இதை தொடர்ந்து வரும் 25 தேதிவரை மனோகரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலேயே அண்ணாதுரை மோகனகிருசுணனை விசாரணைக்கு அழைத்து சென்றதும் சுட்டு கொன்றதும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

 இந்த என்கவுன்டர் குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Posts