Showing posts with label சி.பி.எம் 12. Show all posts
Showing posts with label சி.பி.எம் 12. Show all posts

Mar 14, 2011

அதிமுக கூட்டணியில் கம்யூ 12+10 ஒதுக்கீடு


அதிமுக கூட்டணியில் சி.பி.எம் 12, சி.பி.ஐ 10 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் சி.ராமகிருட்டிணன், த.பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து செயலலிதாவை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

அதிமுக கூட்டணியில் இதுவரை தேமுதிக 41, சி.பி.எம் 12, சி.பி.ஐ 10, மமக 3, சமக 2, இதரம் 6 என மொத்தம் 74 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள 160 தொகுதிகளில் அதிமுக மதிமுக தொகுதிகளை பங்கிட்டு கொள்ள வேண்டும்.

மதிமுகவுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கி மீதம் உள்ள 144 தொகுதிகளில் அதிமுக போட்டியிடக்கூடும் என தெரிகிறது. 

மதிமுக 21 தொகுதிகள் கேட்டு வருகிறது. குறைந்தது 18 தொகுதிகளையாவது தரவேண்டும். இல்லாவிட்டால் தனித்துபோட் என்ற நிலையில் மதிமுக உள்ளது.

Popular Posts