Showing posts with label கிரந்தம். Show all posts
Showing posts with label கிரந்தம். Show all posts

Dec 1, 2010

தமிழ் வலைபதிவர்களே மறந்துவிடாதீர்கள்: 26.2.2011(கிரந்தம்)

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்த உள்ளது.

இதற்காக 6.11.2010 அன்று நடந்த கூட்டத்தில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்ப்பதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட வில்லை. மாறாக இது குறித்த இறுதி முடிவு எடுக்கும் நாள் 26.2.2011 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6.11.2010 அன்றைய கூட்டத்தில் தகவல்தொடர்புதுறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். இதனால் ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது தகவல்தொடர்புதுறை அமைச்சராக கபில்சிபல் உள்ளார்.

இதனால் கிரந்தம் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடையவர்களின் பணி மிகமிக எளிமையாகிவிட்டது. ஆனால் தமிழர்களின் நிலை?

தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்க்கும் முயற்சி குறித்து உலகெங்கும் உள்ள குறிப்பாக தமிழகத்தில் உள்ள பலருக்கும் தெரியாது. இது இணைய ஊடகம் வழியாக மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மூத்த தமிழர் அறிஞர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்கும் பணியில் உள்ள பத்திரிக்கைகள் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ் ஒருங்குறியில் கிரந்த குளறுபடி வருவது நிச்சயம்.

தற்பொது உள்ள ஒரே ஆறுதல் வலைபதிவர்கள். இது குறித்து அனைவரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தங்களுக்கு இயன்றவரை இணைய தொடர்பு இல்லாதவர்களிடமும் இந்த செய்தியை கொண்டு சேருங்கள்.

கிரந்தம் சேர்ப்பதற்கு எதிராக தங்கள் வலைபூவில் ஒருபதிவாவது எழுதி உங்கள் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

இணைய தமிழர்களே உங்கள் கையில் தான் உள்ளது தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்வதும், அதை தடுப்பதும்.


இந்த பிரச்சனையை அப்படியே 26.2.2011க்கு விட்டுவிடாமல் இயன்றவரை தினமும் நினைவூட்டிக்கொண்டே இருங்கள்.

கூட்டு முயற்சிக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்.

விபரங்களை தெரியப்படுத்துங்கள்

Popular Posts