திமுக இந்த அளவுக்கு சுயமரியாதை இழந்தது இல்லை. இலவச திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்ததோடு ஐந்து ஆண்டுகளும் இலவசத்தை வாரிவழங்கிய கட்சி திமுக. ஆனால் ஆட்சியில் இருந்த திமுக தேய்ந்துள்ளது, நாங்கள் வளர்ந்துள்ளோம் என்கின்றது காங்கிரசு.
காங்கிரசு தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்ற பச்சை பொய்யை சொல்லி 63 தொகுதிகளை மிரட்டி பெற்றுள்ளனர். அதுவும் கருணாநிதியின் குடும்பத்திற்குள் நுழைந்து அநாகரீக அரசியல் நடத்தியுள்ளது காங்கிரசு.
இத்தனையும் செய்தும் இன்றோ நாளையோ கருணாநிதியின் மனைவி, துனைவி, மகள் கைது காத்திருக்கிறது. திமுகவினர் ஏராத்தாள ராசாவை மறந்தே விட்டார்கள். திகார் சிறையில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் முடங்கிக்கிடப்பது எவ்வளவு பெரிய கேவலம்?
கருணாநிதியின் இறுதி நாட்களை காங்கிரசு தலைவியின் காலடியில் கொடுக்க திமுக தொண்டர்கள் தயாரில்லை.
ஆட்சியை பிடிக்காவிட்டாலும் காங்கிரசு 20க்கும் கூடுதலான தொகுதிகளில் வெற்றிபெற்றால் திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
தமிழகத்தில் ஆட்சியை தீர்மாணிக்கும் கட்சியாக காங்கிரசை வளர்த்துவிட எந்த திமுக தொண்டனும் தாயராக மாட்டான்.
தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆட்சிக்கு காங்கிரசு ஆதரவு தராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
காங்கிரசு 63லும் தோற்க வேண்டும். அப்போது தான் அதன் ஆட்டம் அடங்கும். அந்த இலக்கை அடைய என்றோ தயாராகிவிட்டோம் என்கின்றனர் திமுக தொண்டர்கள்.
திமுக தொண்டர்கள் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் அதை தான் எதிர்பார்க்கிறான்.
