Showing posts with label கருணாநிதியின் விதி. Show all posts
Showing posts with label கருணாநிதியின் விதி. Show all posts

Mar 8, 2011

திமுக ராசினாமா காரித்துப்பும் டெல்லி நிருபர்கள்


இன்றும் மாலை நெருங்குகிறது என்ன நிலவரம் என்று கேட்க டெல்லி பத்திரிக்கை நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். 

உங்களுக்கு வேரவேலை இல்லையா? என்பது தான் முதல் பதிலாக வருகிறது. 

ஒரு காலத்தில் தமிழக முதலமைச்சர் டெல்லி வருகிறார் என்றால் அத்தனை பத்திரிக்கையாளர்களும் வீட்டுப்பாடத்துடன் தயாராக இருப்பார்கள். உறுதியான முடிவுகளுக்கு பெயர் பெற்றது தமிழக அரசியல்.

ஆனால் கடந்த 2 நாட்களாக இங்கு நடக்கும் நாடகங்கள் உண்மையில் தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கே கேவலமாக இருக்கிறது. நேற்று கூட கேரள உட்பட பல மாநில பத்திரிக்கையாளர்கள் திமுக ராசினமா விடயத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தார்கள். இன்று அதை கண்டுகொள்ளவே இல்லை. 

இது பற்றி பேசினாலே மற்ற மொழி பத்திரிக்கையாளர்கள் கேவலமாக பேசுகிறார்கள். இதே பதிலை தான் டெல்லியில் உள்ள மலையாள பத்திரிக்கை நண்பரும் சொன்னார்.

கருணாநிதி இறுதிகாலத்தில் ஏன் தான் இப்படி கேவலப்படுகிறாரோ? கோபம் போய் பாவம் என்ற பரிதாப எண்ணம் தான் வருகிறது.

Jan 30, 2011

திமுகவை குழிதோன்டி புதைக்கும் கருணாநிதி


காங்கிரசை தோற்கடிக்க உறுவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தந்தை பெரியார், அண்ணா அவர்கள் எந்த நோக்கத்துக்கான திமுகவை உருவாக்கினார்களோ அந்த நோக்கம் கருணாநிதியால் முடிவுக்கு வந்தது.

காங்கிரசை தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கவேண்டும் என்பது திமுகவின் முதல் கொள்கை.

ஆனால் அண்ணாவால் விரட்டப்பட்ட காங்கிரசு இன்று கருணாநிதியின் குரல்வலையை பிடித்துள்ளது.

அடுத்து திமுக &காங்கிரசு கூட்டணி வெற்றிபெற்றால் நிச்சயமாக 50 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக ஆட்சி பீடத்தில் காங்கிரசு அமரும் என்பதில் சந்தேகமில்லை.

2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட 2011 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் ஒரே கட்சி காங்கிரசு தான். இந்த அதிர்ச்சியை எப்படி சீரணித்துக்கொள்வது என்றே தெரியவில்லை.

இந்த தேர்தலில் எனது கணிப்பு படி திமுக கூட்டணியில் இப்படி ஒதுக்கீடுகள் அமையலாம்

திமுக     140 (2006 - 130)
காங்கிரசு      60 (2006 - 48)
பாமக      30 (2006 - 31)
வி.சிறுத்தை 2  (2006 - 9)
இதரம் 4  (2006 - 4)

இந்த கூட்டணி வெற்றி பெருமானால் தமிழக ஆட்சி கட்டிலில் திமுகவும் காங்கிரசும் ஒன்றாக அமரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈழம் அழித்து தமிழகத்தை பிடித்தது காங்கிரசின் சாதனை. குடும்பம்  காங்கிரசை வளர்த்து, திமுகவை அழித்தது கருணாநிதியின் சாதனை.


திமுக தன்னோடு அழிந்துபோய்விட வேண்டும் என்பது தான் கருணாநிதியின் திட்டமா?

காங்கிரசை கழட்டிவிட்டால் திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் கருணாநிதியின் யோசனை இதுவாக கூட இருக்கலாம்.

இப்போது காங்கிரசை கழட்டிவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும். ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஒருவேளை குடியரசு தலைவர் ஆட்சி என்றால் அங்கு காங்கிரசின் கைதான் ஓங்கி இருக்கும். மத்திய ஊழல் வழக்குகளில் தன் மனைவி, துணைவிகள் கைது செய்யப்படலாம். குடும்ப சண்டையால் தேர்தல் வெற்றி தோல்வியை கூட பார்க்க முடியாமல் போகலாம்.

அய்யகோ... நல்ல தந்தையின் மன ஓட்டங்களை யார் அறிவார். 

தள்ளாதை வயதில் இப்படி காங்கிரசின் கிடுக்கிபிடியில் சிக்குவது தான் கருணாநிதியின் விதியா? 

Popular Posts