Showing posts with label இழுபறி நிலை. Show all posts
Showing posts with label இழுபறி நிலை. Show all posts

Mar 10, 2011

அதிமுக 95 தொகுதிகளில் வெற்றி:கருத்துகணிப்பு


அதிமுக.95, திமுக.76, தேமுதிக.24, காங்கிரசு 10, பாமக.8, கம்யூ.6, மதிமுக 3, கொமுக 3, வி.சி.2, இதரம்.7, என்ற கருத்துக்கணிப்பை பார்த்து அதிமுக அதிர்ச்சியிலும் திமுக கொண்டாடத்திலும் இருக்கிறது.

திமுக கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில் அதிமுக கூட்டணியின் இன்னமும் இலைமறைகாய் ரகசியங்களே நடந்து வருகிறது. பெரும்பான்மையை பெற 150 தொகுதிகளிலாவது அதிமுக போட்டியிட வேண்டும் என செயலலிதா திட்டமிடுவதாக தெரிகிறது.

இதற்காக மதிமுக மற்றும் கம்யூனிசுட்டு கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க காய்நகர்த்தல் நடக்கிறது. அதனால் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. 

ஒருவேளை மதிமுக மற்றும் கம்யூனிசுட்டுகள் கூட்டணியை விட்டு விலகினால் தேர்தல் வெற்றி எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பை அதிமுக, திமுக அணிகளுமே மும்முரமாக சேகரித்தன.

மதிமுக கம்யூனிசுட்டுகள் விலகி சிறு கட்சிகளுடன் மூன்றாம் அணி அமைத்தால் கூடுதல் பாதிப்பு அதிமுக அணிக்கே என்பது தான் கருத்துக்கணிப்புகளின் தீர்வு

உளவுதுறை சேகரித்த புள்ளியல் கருத்துக்கணிப்பு :
மதிமுமுக&கம்யூனிசுட்டு மூன்றாம் அணி அமைத்தால்

அதிமுக.95,
தேமுதிக 24
இதரம் 3
மொத்தம் 122

திமுக.76
காங்கிரசு 10,
பாமக.8
கொமுக 3 
வி.சி.2
இதரம்.2
மொத்தம் 101

கம்யூ.6
மதிமுக 3
இதரம் 2 
மொத்தம் 11

இதுபோன்ற இழுபறி நிலை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி என்ற நிலையை அறிவித்து அதிமுமுக அணியில் உள்ள தேமுதிகவை சேர்த்து திமுக ஆட்சி அமைத்துவிடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

Popular Posts