அலைகற்றை ஊழலில் ராசாவுடன் சேர்ந்து கருணாநிதியும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளளார் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராசாமீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள சுப்பிரமணிய சாமி தான் இந்த வழக்கையும் தொடர்ந்துள்ளார்.
அலைகற்றை ஊழலால் பாகிசுத்தான் உளவு அமைப்பு மற்றும் சீன ராணுவ அமைப்புகள் பயனடைந்துள்ளன என சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும் இந்த வழக்கில் ராசாவுடன் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இது குறித்து விளக்கம் அளிக்கும் படி சி.பி.ஐ., க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணாநிதி உள்ளிட்டோர் மீது தனி மனுவாக வழக்கு தொடரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சுப்பிரமணிய சாமி புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.