Mar 9, 2011

150 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்


சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளது. இதவே மதிமுக மற்றும் கம்யூனிசுட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறிக்கு காரணமாக கூறப்படுகிறது.

தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக 41, மமக 3, இதரம் 3 மொத்தம் 47 ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 187 தொகுதிகளில் அதிமுக 150 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மதிமுக 18 ம.கம்யூ 10, இ.கம்யூ 7, சமக 2 தொகுதிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

விசயின் தந்தை சந்திரசேகர் அதிமுக வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அதிமுக 150, அதிமுக சின்னத்தில் மமக 3, சமக 2 இதரம் 3 என மொத்தம் 158 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது. 

158 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் எளிதாக பெரும்பான்மையை பெற்றுவிட செயலலிதா திட்டமிட்டுள்ளார். 

மதிமுக மற்றும் கம்யூனிசுட்டுகளுக்கு உறுதியாக வெற்றிபெரும் அவர்கள் விரும்பும் தொகுதிகளை கொடுத்து சமரசப்படுத்த தீவிரம் காட்டப்பட்டுள்ளது.

கூடுதல் தொகுதிகள் என்ற போர்வையில் வெற்றிபெறாத தொகுதிகளை பெருவதை விட உறுதியாக வெற்றிபெரும் குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள மதிமுக கம்யூனிசுட்டு கட்சிகளும் தயாராகியுள்ளதாக தெரிகிறது.

செயலலிதாவின் இந்த அதிரடி திட்டம் மூலம் 220 க்கும் கூடுதலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment

Popular Posts